தமிழ் மீடிய மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது என்று அரசு பள்ளிகள் குறித்து ஸ்ரீனிவாசன் பேச முயன்ற பொழுது கடும் பதற்றம் அடைந்த கார்த்திகேயன்..!

தமிழ் மீடிய மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது என்று அரசு பள்ளிகள் குறித்து ஸ்ரீனிவாசன் பேச முயன்ற பொழுது கடும் பதற்றம் அடைந்த கார்த்திகேயன்..!

Share it if you like it

கல்வியறிவில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலம் தமிழகம் என்று கூறும் நாம் தான் நீட் தேர்விற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். மேலும் பின் தங்கிய மாநிலங்கள் கூட நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்காத பொழுது, தமிழகம் மட்டும் விலக்கு கேட்பது தமிழக மாணவர்களின் திறமையை அவமதிக்கும் செயல் என்பது பல கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

அனைத்து மாணவர்களும் மருத்துவராக கூடிய வாய்ப்பினை நீட் தேர்வு ஏற்படுத்தி தருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. குறிப்பாக “ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு வரப்பிரசாதம் என்பது திண்ணம். மிகப்பெரிய மருத்துவ கல்லூரி வைத்து இருப்பவர்களின் பிள்ளைகளாக இருந்தாலும் கூட, அது ஜனாதிபதியின் பேரனாக இருந்தாலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ சீட் கிடைக்கும் என்ற நிலையை நீட் தேர்வு உருவாக்கி விட்டதால். மருத்துவ மாஃபியாக்கள் தொடர்ந்து அரசியல்வாதிகள், சில்லறை போராளிகள், நெறியாளர்கள் போர்வையில் மக்கள் மத்தியில் நீட் தேர்வு குறித்து பொய்யான பிம்பத்தை உருவாக்க முயன்று வருகின்றனர் என்பதற்கு. அண்மையில் புதியத்தலைமுறை ஊடகத்தில் நிகழ்ந்த விவாதமே சிறந்த சான்று என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it