ஐயப்ப பக்தரிடம் நோஸ் கட் வாங்கிய தி.மு.க ஆதரவாளர் கரு. பழனியப்பன்.
ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகளை மட்டுமே குறி வைத்தும், மாற்று மத மக்களின் உணர்வுகளை புண்படுத்தாத வகையில் பிரபல ஊடகமான ஜீ தமிழில் விவாதம் என்னும் பெயரில் தன்னை மட்டும் அறிவாளியாகவும் கேள்வி எழுப்பும் நபர்களை மட்டம் தட்டும் நோக்கில் தொடர்ந்து தமிழா தமிழா ஊடக விவாதத்தை நடத்தி வருபவராக கரு. பழனியப்பன் திகழ்கிறார் என்பது அனைவரின் குற்றச்சாட்டா உள்ளது.
கிறிஸ்தவ மிஷநரிகள் அப்பாவி ஹிந்துக்களை மதமாற்றம் செய்வது பற்றியோ, இஸ்லாமிய மதத்தில் உள்ள மூட பழக்கங்களை குறித்தோ பேசாமல் ஈ.வெ.ரா சிந்தனைகளையும், திராவிட சித்தாந்தங்களையும், இளைஞர்கள் அப்பாவி மக்கள் மனதில் புகுத்துவதும் பணியையே இன்று வரை மார்கெட் போன கரு. பழனியப்பன் போன்ற நபர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது பெரும்பாலான மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
தமிழா தமிழா விவாதத்தில் கலந்து கொண்ட சிறுவன் ஒருவரினிடம் எவ்வாறு கேள்விகளை கேட்க வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தனது அதிமேதாவி தனத்தை காட்டிய காணொளி சமீபத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் ஐயப்ப பக்தர் ஒருவரிடம் கரு. பழனியப்பன் நோஸ் கட் வாங்கிய காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.