தரைமட்டமாக்கப்பட்ட வீடு… கரூரில் தி.மு.க.வினர் அட்ராசிட்டி!

தரைமட்டமாக்கப்பட்ட வீடு… கரூரில் தி.மு.க.வினர் அட்ராசிட்டி!

Share it if you like it

கரூரில் ஒருவரின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள் தி.மு.க.வினர். இதனால், கரூர் மாவட்டமே கொந்தளிப்பாக காணப்படுகிறது.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். கூலித்தொழிலாளி. இவரது வீடு மண் வீடாக இருந்திருக்கிறது. இதை கான்கிரீட் வீடாக மாற்ற வேண்டும் என்பது தர்மராஜின் ஆசை. ஆனால், போதிய வருமானம் இல்லாததால் அந்த மண் வீட்டிலேயே வசித்து வந்திருக்கிறார். இதனிடையே, தர்மராஜுக்கு திருமணம் ஆகியது. எனவே, மனைவியுடன் வாழ ஒரு நல்ல வீடு இல்லையே என்று மிகவும் வேதனைப்பட்டார். ஆகவே, குருவி சேர்ப்பதுபோல சிறுகச் சிறுக பணம் சேர்த்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், அவரது மனைவி கர்ப்பம் தரித்தார். இதையடுத்து, பெண் வீட்டார் வலைகாப்பு நடத்தி பெண்ணை தங்களுக்கு ஊருக்கு அழைத்துச் சென்றனர். இந்த சமயத்தில் தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டார் தர்மராஜ். அதாவது, மனைவி குழந்தையைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பும்போது, நமது வீடு கான்கிரீட் வீடாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதைப் பார்த்து மனைவி சந்தோஷப்பட வேண்டும் என்று நினைத்தார். ஆகவே, தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து ஹலோ பிளாக் கற்களை வாங்கி கான்கிரீட் வீடு கட்டும் பணியைத் தொடங்கினார். வீடும் வெற்றிகரமாக கட்டப்பட்டு முடியும் தருவாயில் இருந்தது.

ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை, கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டை பறிகொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் தர்மராஜ். ஆம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், வேலாயுதம்பாளையும் பகுதியின் கவுன்சிலருமான தி.மு.க.வைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர், தனது குண்டர் படையை அனுப்பி, தர்மராஜின் வீட்டை இடிக்கச் செய்திருக்கிறார். எதற்காக வீட்டை இடித்தார்கள் என்பதுகூடத் தெரியாமல் தவித்து வருகிறார் தர்மராஜ். இதுகுறித்து வேலாயுதம்பாளையும் போலீஸில் புகார் செய்திருக்கிறார். ஆனால், ஏழை சொல் அம்பலத்தில் ஏறுமா? அதுவும் ஆளும் கட்சியினரை எதிர்த்து?

வழக்கம் போல போலீஸ் கைவிரித்து விட்டது. தற்போது, கோர்ட்டை நாடும் முடிவில் இருக்கிறார் தர்மராஜ். ஆனால், கோர்ட்டில் இந்த வழக்கு எத்தனை ஆண்டுகள் நடக்குமோ, எப்போது தீர்ப்பு வருமோ என்ற வேதனையுடன் பரிதவித்து வருகிறார் தர்மராஜ்.


Share it if you like it