காஷ்மீர் இனப் படுகொலை: காரணம் யார் தெரியுமா?

காஷ்மீர் இனப் படுகொலை: காரணம் யார் தெரியுமா?

Share it if you like it

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் பெருகியதற்கும், ஹிந்து பண்டிட்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதற்கும் 1989-ல் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று அம்மாநில காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ஷேஷ் பால் வைத் குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினரான ஹிந்து பண்டிட்கள் எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள் மற்றும் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது இப்படம். இதைப் பார்த்துவிட்டு பலரும் கண்ணீர் சிந்தி வருகின்றனர். கல்நெஞ்சையும் கரைவைத்து வருகிறது இப்படம். ஆனால், சில தேச விரோத சக்திகளும், போலி போராளிகளும் இப்படம் உண்மைக்கு புறம்பானது என்று கூறி, இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அப்போது ஆட்சியிலிருந்தது வி.பி.சிங் தலைமையிலான அரசு என்றும், இதற்கு ஆதரவு கொடுத்தது பா.ஜ.க.தான் என்றும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில்தான், ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையின் தலைமை இயக்குனராக (டி.ஜி.பி.) இருந்த ஷேஷ் பால் வைத், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் உண்மை சரித்திரம் இந்நாட்டில் வாழும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 70 ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகள் கொண்ட ஒரு குழு ஜம்மு காஷ்மீர் காவல்துறையால் கைது செய்யப்பட்டது. ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அப்போதிருந்த ஃபரூக் அப்துல்லா தலைமையிலான அரசாங்கத்தின் தவறான சிந்தனை அரசியல் முடிவால், மேற்படி பயங்கரவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவர்கள்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஹிந்துக்களுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள்.

அதாவது, 1987 முதல் 1990-ம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் ஃபரூக் அப்துல்லா. அப்போது மத்தியில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. இந்த சமயத்தில்தான், பாகிஸ்தானில் பயற்சி பெற்ற ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகள் 70 பேர் கொண்ட கும்பலை காஷ்மீர் போலீஸ் கைது செய்தது. இவர்களில், த்ரேகாமின் முகமது அப்சல் ஷேக், ரபீக் அகமது அஹங்கர், முகமது அயூப் நஜார், ஃபரூக் அகமது கனாய், குலாம் முகமது குஜ்ரி, ஃபரூக் அகமது மாலிக், நசீர் அகமது ஷேக் மற்றும் குலாம் டி உதுலி ஆகிய முக்கிய தீவிரவாதிகளும் அடங்குவர். ஆனால், 1989 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த 70 தீவிரவாதிகளையும் ஃபரூக் அப்துல்லா அரசு விடுவித்து விட்டது. இது காங்கிரஸ் அரசுக்கு தெரியாமல் எப்படி நடந்திருக்கும்?” என்று கூறியிருக்கிறார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த தீவிரவாதிகள்தான் பின்னர் பாகிஸ்தானின் ஆதரவுடன் பயங்கரமான தீவிரவாதிகளாக மாறி, இந்திய அரசுக்கு எதிராக பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டனர். இதுதான் 1990-ம் ஆண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த ஹிந்து பண்டிட்களுக்கு எதிரான அட்டூழியங்களில் ஈடுபட வைத்தது. மேலும், அச்சமூகத்துக்கு எதிராக இனப்படுகொலை செய்யும் அளவுக்கும் துணிந்தனர். இதன் காரணமாகவே, பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள மதரஸாக்களால் ஆதரிக்கப்பட்ட தீவிர இஸ்லாமியவாதிகள், லட்சக்கணக்கான காஷ்மீரி பண்டிட்களை ஒரே இரவில் பள்ளத்தாக்கை விட்டு துரத்தியடித்தனர். அதோடு, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் ஆயிரக்கணக்கான காஷ்மீரி இந்துக்கள் கற்பழிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். பயத்தில் காஷ்மீரை விட்டு வெளியேறியவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறினார்கள். இதைத்தான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெளிச்சம்போட்டு காட்டி இருக்கிறது.


Share it if you like it