ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் கிராமத்தை சேர்ந்த ஷௌகத் பதான் என்ற இஸ்லாமிய நபர், மத்திய பிரதேசத்தை பூர்விகமாக கொண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள நொய்டா நகரில் மாடலாக பணிபுரிந்து வந்துள்ள ஒரு இந்து பெண்ணை காதலித்துள்ளார். காதலிக்கும்போது தன்னை இஸ்லாமிய நபராக காட்டிக்கொள்ளாமல் ஹிந்து மதத்தை சேர்ந்தவராக பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றி அந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி தன்னுடைய காதல் வலையில் விழ வைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் தான் ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன் என அப்பெண்ணிடம் தன் சுயரூபத்தை காட்டியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார் அந்த இந்து பெண். பின்னர் அந்த பெண்ணையும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வற்புறுத்தியிருக்கிறார். மேலும் ஷௌகத் பதானின் குடும்பமும் சேர்ந்து அந்த ஹிந்து பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொலை முயற்சியும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த இந்து பெண் மதம் மாறாததால் அந்த பெண்ணை விவாகரத்தும் செய்யாமல்,அந்த இஸ்லாமிய நபர் ஷௌகத் பதான் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது தன்னைவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் தனது கணவரின் சகோதரர் ஒரு பயங்கரவாதி என்றும் தற்போது அவர் பாகிஸ்தானில் வசித்து வருவதாகவும், நான் நீதிக்காக அலைகிறேன். ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி (எஸ்டிபிஓ) அப்துல் ஹமீது, அந்த இஸ்லாமிய நபரான ஷௌகத் பதான் மீது ஏழு வழக்குகளை பதிவு செய்துள்ளார், அவற்றில் 6 வழக்குகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வழக்கில் எங்கள் விசாரணை நடந்து வருகிறது” என்றும் கூறியுள்ளார்.