காஷ்மீரில் மீண்டும் திரும்புகிறதா 1990?!

காஷ்மீரில் மீண்டும் திரும்புகிறதா 1990?!

Share it if you like it

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் ஹிந்து பண்டிட் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் 1990 திரும்புகிறதா என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆரம்பத்திலிருந்தே பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அவ்வப்போது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வந்தனர். குறிப்பாக, 1987-ம் ஆண்டு முதல் இத்தாக்குதல் அதிகரித்தது. ஹிந்து பண்டிட்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என அம்மாநிலத்தின் சிறுபான்மை இனத்தினரை குறிவைத்து நடந்த இத்தாக்குதலில் உயிரிழப்புகள் தொடர்கதையாக இருந்தன. இதற்கு, காஷ்மீரில் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் உடந்தையாக இருந்தனர். 1989-ம் ஆண்டு இறுதியில் மத்திய அமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத்தின் மகள் டாக்டர் ரூபியா பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். அப்போது, இந்திய சிறையில் இருக்கும் முக்கிய பயங்கரவாதிகளை விடுவித்தால் மட்டுமே சயீத்தின் மகளை விடுவிப்போம் என்று பயங்கரவாதிகள் அறைகூவல் விடுத்தனர். எனவே, சில பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, காந்தஹார் விமானக் கடத்தில் சம்பவம் அரங்கேறியது. அப்போதும், இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதிகளை விடுவிக்கும்படி டிமான்ட் வைக்கப்பட்டது. அப்போதும், முக்கிய தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த பயங்கரவாதிகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் கைகோர்த்து 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி மிகப்பெரிய இனப்படுகொலையை அரங்கேற்றி விட்டனர். ஆம், ஹிந்து பண்டிட்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை இஸ்லாமிய மதத்துக்கு மாற வேண்டும் அல்லது ஊரை விட்டு வெளியேற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உயிரை விட வேண்டும் என்று கொக்கரித்தனர். அதோடு, அன்றைய தினம் இரவே கண்ணில் கண்ட ஹிந்து பண்டிட்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை சரமாரியாக சுட்டுத் தள்ளினார்கள். இதற்கு அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்த இஸ்லாமியர்களும் உடந்தையாக இருந்ததுதான் வேதனை. இதனால், ஹிந்து பண்டிட்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தங்களது நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாததால் இந்த விவகாரம் மக்களை பெரிய அளவில் சென்று சேரவில்லை.

இந்த நிலையில்தான், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த ஹிந்து பண்டிட்கள் இனப்படுகொலையை கருவாக வைத்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டார். இதன் பிறகே, காஷ்மீரில் ஹிந்துக்களுக்கு நடந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதைப் பார்த்து விட்டு இந்திய மக்கள் மட்டுமல்ல, அண்டை நாட்டு மக்களும் கண்ணீர் விட்டனர். எனினும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிரடி சோதனை மேற்கொண்டு பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது மத்திய அரசு. இதனால் ஹிந்து பண்டிட்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சகஜ நிலைக்கு திரும்பி வந்து, தங்களது பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.

இந்த சூழலில்தான், காஷ்மீரில் மீண்டும் ஒரு ஹிந்து பண்டிட்டை கொலை செய்து, தாங்கள் இன்னும் ஆக்டிவ்வாகவே இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள். அதாவது, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் டிரைவராக பணியாற்றி வந்தவர் சதீஷ்குமார் சிங் ராஜ்புத். காஷ்மீரி ஹிந்து பண்டிட்டான இவரைத்தான் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நேற்று சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இதனால், மீண்டும் 1990-ம் ஆண்டு திரும்புகிறதோ என்று அச்சமடைந்திருக்கிறார்கள் காஷ்மீரி ஹிந்து பண்டிட்கள். ஆகவே, மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு, பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.


Share it if you like it