காஷ்மீர் பள்ளத்தாக்கில் சதித் திட்டத்தில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளை மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் புகழிடமாகத் திகழ்ந்தது காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிதான். தீவிரவாதிகள் இங்கு பதுங்கி இருந்துதான் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். மேலும், இந்திய எல்லையிலும் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வந்தனர். 2021-ம் ஆண்டு பள்ளிக்குள் நுழைந்து 2 ஆசிரியர்களை சுட்டுக் கொலை செய்தனர். மேலும், மெடிக்கல் உரிமையாளர் உட்பட 7 பேரை கொடூரமாக சுட்டுக் கொன்றனர். மேலும், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி அமைந்த பிறகு, தீவிரவாதிகள் ஆட்டம் அதிகமானது.
எனவே, தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கவும், ஒடுக்கவும் முடிவு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தீவிரவாதிகளை ஒடுக்குவதில் கைதேர்ந்த அதிகாரிகளை காஷ்மீருக்கு அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டார். இதன் பிறகு, தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பைப் போல மாநில குற்றப் புலனாய்வை அமைப்பு ஒன்றும் அமைக்கப்பட்டது. இவர்கள், லோக்கல் போலீஸாருடன் இணைந்து காஷ்மீர் பள்ளத்தால் அதிரடி ஆபரேஷனில் ஈடுபட்டனர். இதில், பள்ளத்தாக்கு பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், அவர்களுக்கு உடந்தையாக இருந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் என 700-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இவர்கள் அனைவரும், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மாநில குற்றப் புலனாய்வு அமைப்பினர் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பல தீவிரவாதிகளும், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மாநில குற்றப் புலனாய்வு அமைப்பினர் நேற்று இரவு முழுவதும் தெற்கு மற்றும் மத்திய காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில்தான், 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றையும் எஸ்.ஐ.ஏ. அமைப்பினர் கைப்பற்றி இருக்கிறார்கள். ஆக மொத்தத்தில், காஷ்மீரில் தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழித்து, அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.