சிறுமி மீது கொடூர தாக்குதல்: வீடியோ வைரல்; அபூபக்கர் சித்திக் கைது!

சிறுமி மீது கொடூர தாக்குதல்: வீடியோ வைரல்; அபூபக்கர் சித்திக் கைது!

Share it if you like it

கேரளாவில் 8 வயது சிறுமியை கொடூரமாகத் தாக்கிய அபூபக்கர் சித்திக் என்கிற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரத்தில் இஸ்லாமிய மதப்பாடங்களை நடத்தும் மதரஸா செயல்பட்டு வருகிறது. இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார். இச்சிறுமி நேற்று காலை 7 மணியளவில் மதரஸாவில் படிப்பை முடித்து தனது மாமா வருகைக்காக வெளியே வந்து காத்திருந்திருக்கிறார். அங்கு, சக மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, எதிர் திசையில் இருந்து வந்த வாலிபர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் அச்சிறுமியை தூக்கி, ஆக்ரோஷமாக தரையில் வீசினார். இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமி, அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்.

இதையடுத்து, அச்சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் மதரஸாவிற்கு வந்திருக்கிறார்கள். பின்னர், மதரஸா நிர்வாகிகளிடம் கேட்டதற்கு யார் சிறுமியை தூக்கி வீசியது என்பது தெரியவில்லை என்று கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து, அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது, அவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் அபூபக்கர் சித்திக் என்பவர், சிறுமியை தூக்கி வீசும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர் மஞ்சேஸ்வரம் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் அபுபக்கர் மீது போக்ஸோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஆனால், அபுபக்கர் எதற்காக சிறுமியை தாக்கினார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிவிக்கவில்லை.

இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் தளச்சேரியில் கடந்த 4-ம் தேதி நடந்த ஒரு சம்பவம்தான். அதாவது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன், அங்கு நின்றிருந்த ஒரு காரில் சாய்ந்தபடி நின்றிருந்தான். இதனால் ஆத்திரமடைந்த அக்காரின் உரிமையாளரான முகமது ஷிசாத் என்பவர், அச்சிறுவனை காலால் எட்டி உதைத்தார். இதனால் அச்சிறுவன் கடும் அதிர்ச்சியடைந்தான். இதை சிலர் தட்டிக்கேட்டபோதும், ஷாசாத் அலட்சியமாக காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, முகமது ஷிசாத்தை கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்குதற்குள் தற்போது 8 வயது சிறுமி மீதான தாக்குதலும் நடந்திருப்பதால், கேரள மக்களிடம் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதோ என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.


Share it if you like it