கேரளா ஸ்டோரிக்கு தடை கிடையாது; ஹிந்துக்களை புண்படுத்திய போது எங்கே போனீர்கள் – கேரள நீதிமன்றம்!

கேரளா ஸ்டோரிக்கு தடை கிடையாது; ஹிந்துக்களை புண்படுத்திய போது எங்கே போனீர்கள் – கேரள நீதிமன்றம்!

Share it if you like it

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என கேரள நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

கேரளாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்த, திரைப்படம் இன்று மே-5ம் தேதி (நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சுதிப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரியில்’ அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பாலானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் டீசர் வெளியான போதே பெரும் சர்ச்சை வெடித்தது. அந்த படத்தின் டீசரில் ஒரு பெண் “என் பெயர் ஷாலினி உன்னிகிருஷ்ணன், நான் செவிலியராகி மக்களுக்கு சேவை செய்ய விரும்பினேன். ஆனால் இப்போது ஆப்கானிஸ்தானில் பாத்திமா என்ற பெயரில் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதியாக உள்ளேன். நான் தனியாக இல்லை. என்னைப் போல் 32,000 பெண்கள் உள்ளனர். கேரளாவில் பிறந்த என்னை போன்ற சாதாரண பெண்களை மதமாற்றி சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் பயங்கரவாதிகளாக மாற்றும் கொடிய ஆட்டம் ஆடப்படுகிறது. அதுவும் திறந்த வெளியில் தடுக்க யாரும் இல்லையா? இது என் கதை மற்றும் அந்த 32,000 பெண்களின் கதை. இது கேரளக் கதை.” என கூறுகிறாள்.

இந்த நிலையில், ’தி கேரளா ஸ்டோரிக்கு’ எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் , பிரிவினைவாதிகள் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், பலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். இப்படிப்பட்ட சூழலில், இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில், நீதிமன்றம் கூறியதாவது ; நிறைய சினிமாக்களில் இந்து சந்நியாசிகளை கடத்தல்காரர்களாகவும், ரேபிஸ்ட்டா காட்டி இருக்கிறார்கள். அப்போது, எல்லாம் எதுவும் நடைபெறவில்லை. யாரும் போராட்டம் நடத்தவில்லை. நிறைய மலையாள மற்றும் ஹிந்தி படங்களை உதாரணமாக கூறலாம். இந்த படத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு என வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர்களை பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.


Share it if you like it