கேரளாவில் கொடிகட்டி பறக்கும் ஹிந்தி!

கேரளாவில் கொடிகட்டி பறக்கும் ஹிந்தி!

Share it if you like it

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், கேரளாவிலுள்ள ஒரு கிராம மக்களோ டார்கெட் வைத்து ஹிந்தி மொழியை கற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஹிந்தி மொழியை வைத்து அரசியல் செய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஹிந்தியை கடுமையாக எதிர்த்து வருகிறது தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும். அதேசமயம், மற்ற மாநிலங்களை பொறுத்தவரை, ஹிந்தி படிப்பதற்கு எந்த தடையும் இல்லை. நாடு முழுவதும் இயங்கி வரும் நவோதயா பள்ளிகளில் ஹிந்து மொழி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நவோதயா பள்ளிகளைக் கூட தமிழகத்தில் திறக்க விடாமல் அரசியல் செய்து வருகிறது தி.மு.க.வும், திராவிடர் கழகமும். அதேசமயம், தற்போது மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் ஹிந்து மொழியை கட்டாய பாடமாக்கி இருப்பதாகக் கூறி, ஹிந்தி மொழிக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில், கேரள மாநிலமும் ஹிந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில்தான் கேரள மாநிலத்திலுள்ள ஒரு கிராம மக்கள் ஹிந்தி கற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். செல்லனூர் என்கிற ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள்தான் ஹிந்தி மொழியை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 72 வயதுள்ள ஜானகி அம்மாள் கூட ஹிந்தி மொழி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அக்கிராமத்தில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, அக்கிராம மக்களும் ஹிந்தி மொழி கற்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்.

கிராமத்தில் உள்ள மனித வளத்தைப் பயன்படுத்தி குறைந்த நிதியில் ஒரு தனித்துவமான திட்டத்தை செயல்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஊராட்சி நிர்வாகம் கூறியிருக்கிறது. மேலும், எதிர்வரும் குடியரசு தினத்திற்குள் அனைவரும் ஹிந்தி கற்க, ஒரு வாரத்தில் 8 முதல் 10 வகுப்பு வரை எடுக்கப்பட்டு வருகிறது. உணவு இடைவேளைகளிலும், தேநீர் இடைவேளைகளிலும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் ஹிந்தி மொழி கற்றால், தென் இந்தியாவில் ஹிந்தி தெரிந்த முதல் மக்கள் வசிக்கும் முதல் கிராமமாக இது இருக்கும் என்கிறார்கள்.


Share it if you like it