பாரதப் பிரதமர் மோடி விடுத்த வேண்டுக்கோளை கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்றுக் கொண்டதை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
பாரதப் பிரதமர் மோடி 75 – வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு, பா.ஜ.க. மாநில முதல்வர்கள் தங்களது முழு ஆதரவினை தெரிவித்து இருக்கின்றனர். இதுதவிர, நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களும் தேசியக் கொடியை ஏற்ற முன்வர வேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து இருந்தன.
இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன். பாரதப் பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இருக்கிறார். மேலும், தேசிய கொடி உற்பத்திக்கு காதி மற்றும் கைத்தறி துறைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, சுதந்திர தின விழாவையொட்டி விரிவான நிகழ்ச்சிகளை நடத்த முதல்வர் அழைப்பு விடுத்திருந்த, மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளன.
வீடுகள், பொது இடங்கள், நூலகங்கள் போன்றவற்றில் கொடிகள் ஏற்றப்படுவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். நூலகங்கள், கிளப்களில் சுதந்திரப் போராட்டம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை திட்டமிட வேண்டும். இதுதவிர, ஆகஸ்ட் 15 -ம் தேதி பள்ளிகளில் கொடி ஏற்றிய பின், சிறிது தூரம் ஊர்வலம் நடத்த மற்றும் அனைத்து பணியாளர்களும் அலுவலகத்திற்கு வந்து கொடியேற்றி இவ்விழாவினை சிறப்பிக்க வேண்டும் என கேரள முதல்வர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
பா.ஜ.க., மத்திய அரசு, மோடி மீது வன்மத்தை கக்கும் சுந்தவள்ளி, அருணன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் பினராயி விஜயன் கோரிக்கையை ஏற்று தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்ற முன் வருவார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.