காலிஸ்தான் பிரிவினைவாதம் – திரை மறைவில் இருந்து பாரதத்தில் சதிராடும் சர்வதேச சதி

காலிஸ்தான் பிரிவினைவாதம் – திரை மறைவில் இருந்து பாரதத்தில் சதிராடும் சர்வதேச சதி

Share it if you like it

பாரதத்தின் பஞ்சாப் ஹரியானா மாநிலங்களை தனி நாடாக விடுவிக்க கோரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு அரை நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது . இதில் பல்வேறு பெயர்களில் பல்வேறு அமைப்புகள் தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரின் ஒருமித்த இலக்கு காலிஸ்தான் பிரிவினை வாதம் அதன் பெயரிலான பாரதத்திற்கு எதிரான உள்நாட்டு பயங்கரவாதம் வெளிநாடுகளில் அச்சுறுத்தல் ராஜ்ய ரீதியான அவமதிப்பு என்ற இந்திய விரோதம் மட்டுமே . தற்போது உலகம் முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கும் காலிஸ்தான் பயங்கரவாதம் மேலோட்டமாக பார்க்கும்போது சீக்கிய மக்களின் தனிநாடு கோரிக்கையாக தெரியும். அவர்களின் கடந்த கால இழப்புகளை மீட்டெடுக்க கோரும் அரசியல் முகமாக தெரியும். ஆனால் உண்மையில் சீக்கிய மக்களின் கடந்த கால இழப்புகளையும் அவர்கள் மனதில் இருந்த கசப்புணர்வுகளையும் பகடையாக பயன்படுத்தி பாரதத்தில் காலிஸ்தான் என்ற பெயரில் ஒரு பிரிவினைவாதமும் பயங்கரவாதமும் பல்வேறு கூட்டு சதியாக நிறைவேறுகிறது என்பதே உண்மை.

சுதந்திரப் பிரிவினையின் போது கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் பகுதிகளில் இருந்து எப்படி இந்துக்கள் கொடூரமாக கொல்லப்படும் அனைத்தும் இழந்து அகதிகளாக நிராகரமாக நின்றார்களோ அதே நிலை இந்த மண்ணின் சொந்த மைந்தர்களான சீக்கியர்களுக்கும் நேர்ந்தது சுதந்திரத்திற்கு பிறகும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் அங்கு இந்துக்களுக்கு என்னவெல்லாம் கொடூரங்கள் இழைக்கப்பட்டதோ அது அத்தனையையும் கொஞ்சமும் குறைவில்லாமல் இந்துக்களோடு சேர்ந்து அனுபவித்தவர்கள் சீக்கியர்களே. அந்த வகையில் அவர்களின் தனிநாடு கோரிக்கையும் மதரீதியான எதிர்பார்ப்புகளும் ஒரு திட்டமிட்ட உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்த வல்ல அரசியல் காரணிகளாக மாற்றப்பட்டது.

இந்திய ராணுவத்தில் பெரும் பங்களிப்பு வழங்குபவர்கள் சுதந்திர பாரதத்தில் இதுவரையில் நடந்த போர்களில் சீன ராணுவமும் பாகிஸ்தான் ராணுவமும் பெயரை கேட்ட மாத்திரத்தில் சிதறி ஓடும் எனில் அது சிக் ரெஜிமென்ட் என்பதை இந்தியாவின் ஆட்சியாளர்கள் எப்போதும் பெருமையாக குறிப்பிடுவார்கள் அந்த அளவில் வீரமும் தியாகமும் துணிச்சலும் கொண்டு தேசத்தின் பாதுகாவலர்களாக வாழ்ந்து வரும் ஒரு சமூகத்தை யாரோ ஒரு சிலரை தங்களது கைப்பிடிக்குள் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதம் என்ற பெயரில் ஒரு பிரிவினை பயங்கரவாதத்தை கட்டமைத்து அதன் மூலம் ஒரு இனத்தின் மக்களுக்கு பிரிவினைவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்ற பெயரை நிலை நிறுத்த பார்ப்பது சர்வதேச அளவிலான ஒரு சதியை. இந்த சதையில் பாகிஸ்தானின் ஐஎஸ்யும் பிரிட்டன் கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உளவுத்துறைகளும் சரிசமமான பங்காளிகள். அவர்களைப் பொறுத்த வரையில் அந்தந்த நாடுகளில் அகதிகளாக இருக்கும் சீக்கிய மக்களின் முழு ஆதரவு அவர்களுக்கு தேவை அவர்களை பயன்படுத்தி பாரதத்தின் வளர்ச்சியை தடுப்பதற்கு அவர்களுக்கெல்லாம் காலிஸ்தான் பயங்கரவாதம் தேவை அந்த வகையில் காலிஸ்தான் பயங்கரவாதம் என்ற பெயரில் சர்வதேச நாடுகள் ஒரு பெரிய சதிராட்டம் ஆடி வருவதே எதார்த்த உண்மை.

அதன் விளைவு சுதந்திர இந்தியாவின் காலிஸ்தான் பிரிவினைவாதம் மெல்ல மெல்ல பயங்கரவாதமாக தலைதூக்கியது. பஞ்சாப் ஹரியானா பகுதிகள் முழுமையாக அமைதி இழந்தது உள்நாட்டில் அரசியல் குழப்பங்களும் சிறத்தன்மையும் எழும்போதெல்லாம் காலிஸ்தான் பயங்கரவாதம் தேசத்திற்கு அச்சுறுத்தலாக மாறியது. விந்தரன் வாழை தலைமையிலான பப்பர் கால்சா அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகள் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது அன்று இந்திரா தொடங்கிய ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற நடவடிக்கை பொற்கோவில் சிதைத்து போட்டது அதன் மூலம் காலிஸ்தான் பயங்கரவாதிகள் பெருஅளவில் கொல்லப்பட்டாலும் அந்த பயங்கரவாதம் இன்று வரை பல வகையிலும் தொடர்கிறது.

இதனால் பாரதம் கடந்த காலங்களில் சந்தித்த பொருளாதார சேதங்கள் உயிரிழப்புகள் ராஜ்ய ரீதியான பின்னடைவுகள் ஏராளம் உண்டு . ஆனாலும் கடந்த கால கசப்பு உணர்வுகளின் வெளிப்பாடாகத்தான் இந்த காலிஸ்தான் பயங்கரவாதம் தலைதூக்குகிறது. இதை அமைதி நல்லெண்ணம் சகோதரத்துவம் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும் என்ற பொறுமை காத்து வந்தது . ஆனால் மத்திய அரசின் இந்த பொறுமையை பலவீனமாக நினைத்து சமீப காலங்களில் இந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள் செங்கோட்டையில் தேசியக்கொடி அவமதிப்பு முதல் வெளிநாடுகளில் இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் ஆலயங்கள் இந்துக்கள் மீது தாக்குதல் என்று எல்லை மீறி விட்டார்கள். பொறுமை இழந்த மத்திய அரசு பயங்கரவாதிகளை அதன் பொருளாதார மூலங்களை எல்லாம் இனம் கண்டு வேரறுக்க தொடங்கிவிட்டது.

கடந்த கால கசப்புணர்வுகளால் பிரிவினைவாத பயங்கரவாத மனநிலையில் இருந்த ஒரு சில சீக்கியர்களை தங்களின் கைப்பாவைகளாக மாற்றிக் கொண்ட பல்வேறு அந்நிய அமைப்புகள் அவர்களின் முகத்தை முன்னிறுத்தி பாரதத்தில் சீக்கியர்கள் பிரிவினையை கோருவதாகவும் அதன் காரணமாக அவர்கள் பயங்கரவாத செயல்களை நிகழ்த்துவதாகவும் ஒரு பொய்யான பிம்பத்தை நிலை நிறுத்தி இருக்கிறது. பாரதத்தின் கடந்த கால ஆட்சியாளர்களும் தங்களின் அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்தவும் சர்வதேச ஆளுமையாக முன்னிறுத்திக் கொள்ளவும் இந்த பிரிவினைவாத கோரிக்கையை பகடையாக பயன்படுத்திக் கொண்டார்கள் . அதன் விளைவு காலிஸ்தான் பயங்கரவாதம் உள்நாட்டில் உரிய வகையில் கையாளவோ கட்டுப்படுத்தவோ இல்லை. வெளிநாடுகளில் பெரிய அளவில் அந்நிய ஆதரவோடு வளரத் தொடங்கியது. ஆனால் உண்மையில் சீக்கிய மக்களின் தெய்வீக வாழ்வியலும் தேசிய இறையாண்மையும் எப்போதுமே தேச விரோதமாக யோசிக்கவோ ஒரு விளைவிக்கும் பயங்கரவாத செயல்களை ஆதரிக்கவோ முன் வந்ததில்லை என்பதை சீக்கிய மக்களின் உண்மையான வரலாறுகளை உணர்ந்த யாவரும் உணர முடியும்.

தற்போதைய காலிஸ்தான் பிரிவினை வாதத்தின் கோஷத்தில் இந்திய நிலப்பரப்பில் இருக்கும் பஞ்சாப் ஹரியானா மாநிலங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். பாகிஸ்தான் வசம் இருக்கும் பஞ்சாப் சிந்து உள்ளிட்ட மாகாணங்கள் இடம் பெறாது . இந்த மர்மத்தின் பின்னணி என்ன ? என்று யோசித்தாலே இந்த காலிஸ்தான் பயங்கரவாதத்தின் பின்னணியில் இருப்பது யார்? இந்த காலிஸ்தான் பயங்கரவாதத்தின் நோக்கம் சீக்கியர்களுக்கான தனிநாடா ? அல்லது பிரிவினைவாதம் என்ற பெயரில் பயங்கரவாத செயல்களும் பாரதத்தின் வளர்ச்சி நலன் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் திட்டமிட்ட சதிகளா ? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

இந்த காலிஸ்தான் பயங்கரவாதத்தின் உண்மை முகத்தையும் அதன் பின்னணியில் இருக்கும் சர்வதேச சூழ்ச்சிகளையும் கடந்த கால ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்த போதிலும் அதற்கு அவர்கள் நிரந்தரமான தீர்வை எடுப்பதற்கு அப்போதைய உள்நாட்டு சூழல் இடம் கொடுக்கவில்லை. அவர்களின் அதிகார சுயநலமும் அதை விரும்பவில்லை. அன்றைக்கு இருந்த ராஜ்ய ரீதியிலான பின்னடைவு பொருளாதார பலம் குறைந்த அந்நிய சார்பு நிலை அனைத்தையும் கடந்து ஆட்சியாளர்களுக்கு இருந்த வாக்கு வங்கி அரசியல் பாகிஸ்தான் பாசம் உள்ளிட்ட யாவும் சீக்கிய பயங்கரவாதத்திற்கு எதிராக உண்மையான நடவடிக்கைகளையும் கடுமையான ராஜ்ஜிய நடவடிக்கைகளையும் எடுக்க விடாமல் தடுத்தது. ஆனால் இன்று பாரதம் பொருளாதார அளவிலும் ராஜ்ஜிய ரீதியிலும் பெரும் பலத்தோடு இருப்பதால் இன்றைய ஆட்சியாளர்களுக்கு வாக்கு வங்கி அரசியலை விட பாகிஸ்தானின் பாசத்தை விட பாரதத்தின் நலனை பிரதானம் என்பதால் அவர்கள் துணிச்சலாக முடிவுகளை எடுக்கிறார்கள். அந்த முடிவுகள் காலிஸ்தான் பயங்கரவாதத்தின் அடி வேர் வரை தேடி எடுத்து அறுப்பதால் அந்த காலிஸ்தான் பயங்கரவாதத்தை சீராட்டி வளர்த்த பல்வேறு நாடுகள் இப்போது பதட்டத்தின் உச்சத்தில் வந்து நிற்கிறது.

முன்பை விடவும் இன்னும் தீர்க்கமான கடுமையான நடவடிக்கைகளை காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் அதன் பொருளாதார மூலங்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக பாரதம் முன்னெடுக்கும் . அது காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஒரு முடிவுரையை எழுதுவதோடு எதிர்காலத்தில் இப்படி ஒரு பிரிவினைவாத பயங்கரவாத அமைப்புகள் வருவதையும் தடுக்கும். மேலும் இந்த காலிஸ்தான் பயங்கரவாதம் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்து வரும் கனடா நாடு இதுவரையில் அவர்களை வாக்கு வங்கி அரசியலாக பயன்படுத்தியதும் அகதிகள் போர்வையில் அவர்களுக்கு முழுமையான அரசியல் தஞ்சம் கொடுத்ததையும் சர்வதேச அளவில் பேசும் பொருளாக்கி பாகிஸ்தானைப் போல கனடாவையும் உலக அரங்கில் தனிமைப்படுத்தும். அந்த வகையில் முடிவுக்கு வருவது காலிஸ்தான் பயங்கரவாதம் மட்டுமல்ல. பாரதத்திற்கு எதிராக சர்வதேச அளவில் சதிகளை மேற்கொள்ளும் அத்தனை நாடுகளுக்கும் இறுதி எச்சரிக்கையும் உறுதியான பதிலடிகளும் பாரதத்திடமிருந்து கிடைப்பதன் மூலம் பாரதத்திற்கு எதிரான சர்வதேச செயல்பாடுகளும் ஒவ்வொன்றாக முடிவுக்கு வரும்.


Share it if you like it