கனடா நாட்டில் தளமாக கொண்டு இயங்கி வரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் கூட்டமைப்பு நேற்று ஒரு அதிகாரப்பூர்வ பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. அதில் கனடா நாட்டின் பிராம்ப்டன் நகரம் காலிஸ்தான் பயங்கரவாதத்தின் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ராம்ப்டன் பகுதியில் இருந்து சீக்கியர் அல்லாத மற்ற மக்கள் யாவரும் வெளியேறும் படி எச்சரிக்கையும் கெடுவும் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். இதன் மூலம் கனடாவில் உள்நாட்டு பாதுகாப்பும் அரசியல் குழப்பமும் உச்சத்தில் நிற்கிறது.
அதிகாரப்பூர்வமாக 9 காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் கனடா நாட்டை தளமாக கொண்டு இயங்கி வருகிறது. ரகசியமாக இயங்கும் அமைப்புக்கள் இதை விட பல மடங்கு அதிகம். இந்த அமைப்புகள் யாவும் பாரதத்தில் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள். சர்வதேச அளவில் தேசத்தின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் விடும் அமைப்புகளாக இந்திய வெளியுறவுத்துறையால் அடையாளம் காணப்பட்ட அமைப்புகள். ஆனால் இந்த அமைப்புகள் சர்வ சுதந்திரமாக கனடாவில் உலவி வந்தது . இதன் சொத்துக்கள் வர்த்தக கையாளுகைகள் பொருளாதார மூலங்கள் எல்லாம் கனடா அரசால் முழு சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டது. இந்த பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகள் இதன் ஆதரவாளர்கள் எல்லாம் கனடா நாட்டு குடியுரிமையோடு அந்த நாட்டு அரசின் பாதுகாப்போடு உளவுத்துறை ஆதரவோடும் சர்வ சுதந்திரமாக உலகம் முழுவதும் நடமாடினார்கள்.
சமீபத்தில் தான் கனடா நாட்டு பிரதமர் போர் நெருக்கடி உள்ளிட்ட அவசர தேவைக்காக கனடா நாட்டு பொருளாதாரத்தில் கணிசமான நிதியை ஒதுக்கி இருந்தார். இந்திய ரூபாயின் மதிப்பில் ₹ 4,000 கோடி அளவிலான பணத்தை ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியானது . அடுத்த சில தினங்களில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தங்களது பிரதேசமாக அறிவித்து உள்நாட்டு போருக்கு தயாராகிறார்கள். இனி கனடா பிரதமர் போருக்கு ஒதுக்கிய பணத்தை அவர் விருப்பம் போல் எடுத்து செலவழிக்கலாம். யாரும் தடுக்க முடியாது. ஆனால் எங்கோ இருக்கும் பாரதத்தில் பிரிவினைவாதம் பயங்கரவாதம் பேசியவர்களுக்கு இருக்க இடமும் குடியுரிமையும் அகதி அந்தஸ்தும் அரசியல் அதிகாரமும் கொடுத்து ஆட்சியாளர்கள் வளர்த்து விட்டதன் பலனை இன்று கனடா மக்கள் அறுவடை செய்வது அவர்களின் துரதிருஷ்டமே.
தீவிரவாதத்தை உரம் போட்டு வளர்த்தால் அதன் பலன் ஒருநாள் அந்த தேசத்தை முழுவதுமாக பதம் பார்க்கும் என்பதற்கு கண் கண்ட சாட்சியமாக கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானம் சமகாலத்தில் பாகிஸ்தானையும் உலகம் பார்த்து வருகிறது . இந்த இரு நாடுகளும் பயங்கரவாதத்தை வளர்த்ததன் பலனை ஆரம்பகட்டத்தில் பாரதம் கண்ணீருடனும் ரத்தத்துடனும் அறுவடை செய்தது . ஆனால் உள்நாட்டு பாதுகாப்பு பாதுகாப்பு அமைப்புகளின் பலம் ஒருங்கிணைப்பு காரணமாக இன்று பாரதம் தனது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டது. ஆனால் கர்மாவின் அடிப்படையில் விதைத்த பயங்கரவாதத்தை இன்று பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அறுவடை செய்து வருகிறது . அந்த வரிசையில் இன்று கனடாவும் இணைவது காலத்தின் கட்டாயமாகிறது.
எந்த ஒரு நாடும் மக்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும். ஆட்சியாளர்கள் செய்யும் நன்மைகள் தீமைகள் பெரிய அளவில் முதலில் அந்த நாட்டு மக்களை பாதிக்கும். என்பதை உணர்ந்து ஆட்சியாளர்கள் பொறுப்பாக செயல் பட வேண்டும். ஆட்சியாளர்களின் முதல் கடமை நாட்டையும் மக்களையும் பாதுகாப்பாக உணர வைப்பது தான் . அதுவே தேசிய இறையாண்மை காக்கும் ஒரு அரசின் இலட்சணம் . ஆனால் தற்போது கனடா நாடு சொந்த நாட்டில் பாதுகாப்பின்மையை உணர்கிறது . அரசியல் ஸ்திரமின்மையை எதிர்கொள்கிறது. உள்நாட்டில் பொது அமைதி சட்டம் ஒழுங்கு அனைத்தும் பாதிக்கிறது.
சமீப காலமாக அகதிகள் என்ற பெயரில் வந்த அரபு நாட்டு மக்களால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும் உள்நாட்டு குழப்பத்தை பார்த்தாவது கனடா சுதாரித்திருக்க வேண்டும். அந்த அகதிகளின் எண்ணிக்கை பெருகி அவர்களின் பயங்கரவாத செயல்கள் உள்நாட்டு குழப்பங்களால் சொந்த நாட்டு மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலுக்கு ஆளாகி பெரும் உயிர் சேதம் விளைந்ததில் ஐரோப்பிய யூனியன் அதிர்ந்தது. சமீபத்தில் பிரான்ஸ் நாடு பெரும் உள்நாட்டு குழப்பத்தில் சிக்கி தலைநகரம் பாரிஸ் பற்றி எரிந்ததை பார்த்தாவது கனடா உஷாராகி இருக்க வேண்டும். இதே காலிஸ்தான் ஆதரவாளர்கள் அகதிகள் போர்வையில் வந்த இஸ்லாமியர்கள் ஒன்று கூடி பிரிட்டனில் ஆதிக்கம் செலுத்துவதையும் அதன் காரணமாக அங்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் பார்த்தாவது கொஞ்சம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கலாம். பிரிட்டன் போன்ற நாடுகளில் நடைபெறும் பயங்கரவாதம் கனடாவில் அரங்கேற எவ்வளவு நேரம் ஆகும்? என்று கனடா பிரதமர் யோசித்திருந்தால் இன்றைய சிக்கலை தவிர்த்திருக்கலாம்.
பாரதத்தின் மீது வன்மம் கொண்டு கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் வேண்டுமானால் பாரதத்திற்கு மட்டும் எதிர்ப்பு நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால் அவை யாவும் கனடா நாட்டு மண்ணில் தான் அரங்கேற்றப்படுகிறது. அங்கிருக்கும் இந்து மக்கள் இந்தியர்கள் இந்துக்களை வழிபாட்டு தளங்கள் தான் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதன் அடிப்படையில் நடைபெறும் நிகழ்வுகள் யாவும் கனடா நாட்டின் பாதுகாப்பிற்கும் அமைதிக்கும் அச்சுறுத்தல் விளைவித்தவையே அதை கட்டுப்படுத்த வேண்டியது. தனது அரசாங்கத்தின் கடமை இங்கு உள்ள அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் தனது அரசின் முதல் கடமை என்பதை கனடா பிரதமர் உணர்ந்து செயல்பட்டிருந்தால் இன்று கனடா வளர்த்த காலிஸ்தான் பயங்கரவாதம் அவர்களையே பலி கேட்கும் நிலை வந்திருக்காது.
ஆனால் நாம் எல்லாம் பெரிய வல்லரசுகள் நமக்கு இருக்கும் சர்வதேச செல்வாக்கு பணபலம் ஆயுத பலம் எல்லாம் நம்மை எதிர்க்க யாருக்கும் துணிவை தராது என்ற அகம்பாவம் இன்று அவர்களை அழிக்க தயாராகிறது. பாரதத்தையும் அதன் பரிதவிப்பையும் சாதாரணமாக கடந்து போனார்கள் . ஆனால் பாரதத்தின் நியாயத்தை அவமதித்து அதற்கு ஊறு விளைவித்த பயங்கரவாதிகளுக்கு முழுவதுமாக துணை நின்றார்கள் . இன்று அதன் பலனை கண்ணீரோடும் உதிரத்தோடும் அறுவடை செய்ய தயாராகிறார்கள். காலிஸ்தான் பயங்கரவாதத்தின் இந்த அராஜகத்திற்கு மூல காரணம் கனடா நாட்டின் கடந்த கால கெடுமதியே . இன்று அந்த கெடுமதியே காலிஸ்தான் பயங்கரவாதிகளின் உருவத்தில் அவர்களது ஆட்சியையும் நாட்டையும் பலி கேட்க தயாராகிறது.
அரை நூற்றாண்டு காலம் சுதந்திர பாரதத்தில் அமைதி நலன் வளர்ச்சி இல்லாமல் எந்நேரமும் ஒரு பதட்டத்திலும் பாதுகாப்பு அச்சுறுத்தலிலும் இருக்க காரணமானவை உள்நாட்டு பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் தான் . இந்த பயங்கரவாத பிரிவினைவாத அமைப்புகளை உரம் போட்டு வளர்த்ததில் பல்வேறு சர்வதேச நாடுகளின் உளவுத்துறைக்கும் முக்கிய பங்கு உண்டு. இன்று பாரதம் அத்தனையும் தகர்த்தெறிந்து உள்நாட்டு பாதுகாப்பில் முன்னேறுகிறது . உலகம் முழுவதிலும் தனது தேசத்தின் மக்களை பாதுகாக்க தயாராகிறது. ஆனால் அதன் கண் முன்னே பயங்கரவாதத்தை வளர்த்தெடுத்த ஒவ்வொரு நாடும் அதன் பலனை அறுவடை செய்ய தயாராகிறது. விதைத்த விதையும் வினைத்தவினையும் பல்கி பெருகி ஒரு நாள் வந்தே தீரும் அதை நாம் அறுவடை செய்தே தீர வேண்டும் என்ற பாரதத்தின் சனாதன தர்மத்தின் நியதி இன்று உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் பாடமாகிறது.