இனி மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டைகள் திட்டம் !

இனி மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டைகள் திட்டம் !

Share it if you like it

மத்திய அரசால் 1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டம் தான் கிசான் கிரெடிட் கார்டு திட்டம். . ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) ஆகியவற்றுடன் இணைந்து கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் விவசாயிகள் வறட்சி அல்லது பருவமழை பொய்த்த காலங்கள் மற்றும் விளைச்சல் பாதிக்கப்பட்ட காலங்களில், விவசாயிகள் அதிக வட்டி விகிதத்தில் கடன் வழங்குபவர்களிடம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி வாங்கும் கடன்களை திருப்பிச் செலுத்தத் தவறினால் அதிக துயரங்கள் விவசாயிகள் சந்திக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்கவே, விவசாயிகளுக்கு மிக குறைவான வட்டி விகிதத்தில் கடன் வழங்க கிசான் கிரெடிட் கார்டு தொடங்கப்பட்டது.

கிசான் கிரெடிட் பலன்கள் : விவசாயிகள் கடன் தொகையுடன் விதைகள், உரங்கள், விவசாய உபகரணங்கள் வாங்கலாம். குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். சராசரியாக சுமார் 9% வட்டியில் கடன் கிடைக்கும். அதிகபட்ச கடன் வரம்பு ரூ. 3 லட்சம் வரை கடன்கள் கிடைக்கும் நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் விவசாயிகளுக்கு அதிக கடன் தருவார்கள். அதேபோல் நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் வட்டி விகிதம் குறைவாக இருக்கும்

இந்நிலையில் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் முன்பு விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன் பலன்களை மீனவர்களுக்கும் விரிவுபடுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்ரோ உடன் கூட்டு முயற்சியில் மீனவர்கள் தங்களுடைய துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறிவதற்கும் கரையோரப் பணியாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் உதவுவதற்கு ஒரு கருவி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கருவி விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.


Share it if you like it