நிர்வாண படங்களைக் காட்டி பணம் பறிப்பு! கொளத்தூர் மணி மீது பகீர் புகார்; மெளனம் காக்கும் பெண் போராளிகள்!

நிர்வாண படங்களைக் காட்டி பணம் பறிப்பு! கொளத்தூர் மணி மீது பகீர் புகார்; மெளனம் காக்கும் பெண் போராளிகள்!

Share it if you like it

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி நிர்வாணப் படங்களை காட்டி பணம் பறிக்கிறார் என்று பிரான்ஸ் நாட்டு பெண்மணி அண்மையில் பகீர் குற்றச்சாட்டினை சுமத்தி இருந்தார். ஆனால் இது குறித்து இன்று வரை வாய் திறக்காமல் தமிழக பெண் போராளிகள் எங்கே? சென்றார்கள் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திராவிடர் விடுதலைக் கழகம் என்ற புதிய இயக்கத்தை தொடங்கி, அதன் தலைவராக தன்னை நியமனம் செய்து கொண்டவர் கொளத்தூர் மணி. அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறவர் க.இராசேந்திரன். ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறை போன்றவற்றை விமர்சனம் செய்வது.

அப்பாவி இளைஞர்களிடம் ஹிந்து மதத்தை மட்டுமே, குறிவைத்து இழிவுப்படுத்தும் எண்ணங்களை திணிப்பது என்று தனக்கென, ஒரு கொள்கை வகுத்து கொண்டு செயல்படும் இயக்கமாக திராவிடர் விடுதலைக் கழகம் இயங்கி வருகிறது என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது. கள்ளக்காதலுக்கு, திருமணம் கடந்த உறவு என்று புது விளக்கம் கொடுத்தவரும், தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினருமான சுப.வீரபாண்டியனின் மிக நெருங்கிய கூட்டாளி கொளத்தூர் மணி ஆவார்.

இவர் மீதுதான் பிரான்ஸ் நாட்டு பெண் பாலியல் சம்பந்தமாக பகீர் குற்றச்சாட்டினை சுமத்தி இருந்தார். இக்காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். அதில், நிர்வாணப் படங்களை காட்டி கொளத்தூர் மணி, பணம் பறித்ததாக வேதனையுடன் நீதி கேட்டு வீதிக்கு வந்து போராடியுள்ளார். பிரான்ஸ் நாட்டு பெண்மணிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த கரூர் எம்பி ஜோதிமணி, தி..மு.க எம்பி கனிமொழி, திராவிடர் கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி, உட்பட எந்த ஒரு பெண் போராளியும் ஏன்? இன்று வரை வாய் திறக்கவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பா.ஜ.க, மத்திய அரசு, மோடிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றால் அலறி அடித்து கொண்டு உடனே குரல் கொடுக்கும் போராளிகள் உண்மையான சுயரூபத்தை இப்பொழுதாவது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஸ்டாலினின் 'கொளத்தூர் மணி' வியூகத்தால் அதிர்ச்சி... சரண்டரான 'சசிகலா' ஆதரவு  வீரமணி! | Veeramani greets MK Stalin - Tamil Oneindia


Share it if you like it