Share it if you like it
ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு மார்க்கெட் 85 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது. திருமழிசையில் அமைய உள்ள மார்க்கெட் 25 ஏக்கரில் உருவாக்கப்பட உள்ளதாகவும் நட்சத்திர ஓட்டல், பொழுதுபோக்கு மையம் இடம் பெற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக உலகளாவிய ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனங்களிடம் கட்டுமான வடிவமைப்பை தயார் செய்யும் படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றுவதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் வியாபாரிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த செயல் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
Share it if you like it