Share it if you like it
கலியுக கடவுள் என போற்றப்படும் கிருஷணபரமாத்மா அவதறித்த கோகுலாஷ்டமி தினம், நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடே விழாக் கோலம் பூண்டுள்ளது. தமிழகத்திலும் கிருஷ்ணஜெயந்தி விழா காளை கட்டியுள்ளது. கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் குழந்தைகளுக்கு ராதை, கிருஷ்ணன் வேட்டுமிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இல்லங்கள் தோறும் பெற்றோர்,உறவினர்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வேடமிட்டு அவர்களை நடனமாட செய்து மகிழ்கின்றனர். கோகுலாஷ்டமி நாளன்று குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வேடமிட்டு வாசலில் குழந்தைகள் பாதத்தை மாகோலமிட்டு வணங்கினால் கிருஷ்ணன் தங்கள் இல்லத்திற்கு வருவார் என்பது மக்கள் நம்பிக்கை.
Share it if you like it