தி.மு.க. கவுன்சிலரால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்: முதலில் எதிர்ப்புக் குரல் எழுப்பிய நடிகை கஸ்தூரி!

தி.மு.க. கவுன்சிலரால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்: முதலில் எதிர்ப்புக் குரல் எழுப்பிய நடிகை கஸ்தூரி!

Share it if you like it

தி.மு.க. கவுன்சிலர் ஒருவரால், ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழத்தையும் தாண்டி, இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வினர் அல்லது மத்திய அரசுக்கு எதிராக எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் திரைத்துரையினர் வாய்திறக்காத நிலையில், முதல் ஆளாக குரல் கொடுத்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், பிரபாகரன், அவரது சகோதரர் பிரபு ஆகியோர், அதே கிராமத்தைச் சேர்ந்த நாகரசம்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது மகன்கள் மற்றும் உறவினர்களால் கடந்த 8-ம் தேதி தாக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி பிரபு கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக சின்னச்சாமி, அவரது மகன்கள் சென்னை மாநகர ஆயுதப்படையில் பணிபுரிந்த குருசூர்யமூர்த்தி, மற்றும் குணாநிதி, ராஜபாண்டியன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம், தமிழகத்தையும் தாண்டி இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை எழுப்பியதோடு, பெரும் விவாதப் பொருளாகவும் மாறியது. கொலை செய்தது தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால், இச்சம்பவம் பற்றி போலி போராளிகளும், போலி சமூக ஆர்வலர்களும், போலி அரசியல் விமர்சகர்களும் வாய் திறக்கவில்லை. மேலும், எதற்கெடுத்தாலும் விவாதமேடை நடத்தும் தொலைக்காட்சிகளின் டுபாக்கூர் நெறியாளர்களும் விவாதிக்கவில்லை. அதேபோல, பா.ஜ.க. மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அவ்வப்போது தங்களது ட்விட்டர் பக்கத்தில் வந்து கம்பு சுத்தும் போலி போராளி நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களும் வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில்தான், தமிழ் திரையுலகில் இருந்து முதல் ஆளாக ராணுவ வீரர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து துணிச்சலாக பேட்டி அளித்திருக்கிறார் நடிகை கஸ்தூரி. தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகை கஸ்தூரி, “ஒரு தனியார் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியர் விவகாரத்தில், அந்த ஆசிரியரை மட்டும் பற்றிப் பேசாமல், அந்தப் பள்ளிக் கூட நிர்வாகி என்ன ஜாதி என்பதை தோண்டி துருவி அசிங்கம் செய்தது இந்த சமூகம். ஆனால், தற்போது இந்திய நாட்டையே காக்கும் ஒரு ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இந்த சமூகம் வாயில் வாழைப்பழத்தை வைத்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல, போலீஸ் தரப்பில் என்னவென்றால், இது இரு குடும்பத்துக்குமான பிரச்னை. இதை அரசியலாக்க வேண்டாம் என்கிறார்கள். மேலும், இதைப் பற்றி சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். யார் வீட்டில்தான் குடும்பப் பிரச்னை இல்லை. குடும்பப் பிரச்னை என்றால் கொலை செய்யலாமா? இதை நாம் தட்டிக் கேட்டால், முகம் தெரியாத ஐ.டி.க்களில் வந்த நம்மை கொச்சை கொச்சையாக திட்டுகிறார்கள். இவ்வளவு கேவலமான பிறவிகள் இருக்கும்போது நாடு எப்படி முன்னேறும்” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு, தி.மு.க. அரசுக்கும், அடிமையாக இருக்கும் போலீஸுக்கும் சவுக்கடி கொடுத்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு பலரும் நடிகை கஸ்தூரியை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, ராணுவ வீரர்களும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் நடிகை கஸ்தூரியை பாராட்டியதோடு, நன்றியும் தெரிவித்து வருகிறார்கள்.


Share it if you like it