ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சிகளை கண்டித்த மாஜி முதல்வர்!

ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சிகளை கண்டித்த மாஜி முதல்வர்!

Share it if you like it

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் செயல் முற்றிலும் தவறானது என குலாம் நபி ஆசாத் கண்டித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாளை (மே 28) நடைபெற உள்ளது. இந்த கட்டிடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று கூறி, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணிக்க போவதாக கூறியுள்ளன.

இந்நிலையில், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் ஜனநாயக முற்போக்கு சுதந்திர கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத், “நான் டெல்லியில் இருந்தால், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் நிச்சயம் பங்கேற்பேன். புதிய நாடாளுமன்றம் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்காக, எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை பாராட்ட வேண்டும். ஆனால், அவர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள். நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் முடிவை நான் கடுமையாக எதிர்க்கிறேன்” என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


Share it if you like it