தி.மு.க.வை சட்டசபையிலேயே கிழித்து தொங்கவிட்டு விடுவேன் என்று ஒரு பெண் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தனியார் யூடியூப் சேனல் ஒன்று தி.மு.க. அரசின் செயல்பாடு குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தது. அப்போது, ஒரு பெண் கூறுகையில், “தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்படுவதாகக் கூறிய வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. கேட்டால் நிதிநிலை சரியில்லை என்று கூறுகிறார்கள். ஒருவேளை ஆட்சி முடியும்போது தருவார்களோ என்னவோ.
தவிர, முன்பு அனைவருக்கும் தருவதாகக் கூறிவிட்டு, தற்போது தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே என்று கூறுகிறார்கள். மேலும், வங்கிக் கணக்கில் ரேஷன் அட்டையை இணைக்கச் சொல்கிறார்கள். இதன் மூலம், பென்சன் வாங்குபவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெறுபவர்கள் போன்றவர்களுக்கு உதவித்தொகை 1,000 ரூபாய் வழங்க மாட்டார்கள் என்பது தெளிவாகிறது. தீபாவளிக்கு கரும்பு கொள்முதல் செய்ததிலேயே இவர்களுக்கு பித்தலாட்டம் தெரிந்து விட்டது.
தங்க நகைக் கடனை அடைப்பதாகக் கூறினார்கள். அதையும் செய்யவில்லை. விட்டால் நான் சட்டசபையிலேயே தி.மு.க. அரசின் செயல்பாடுகளை தோலுரிப்பேன் என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்.