பாரத ரத்னா திரு லால் பகதூர் சாஸ்திரி.. காங்கிரெஸ்க்காரர்கள் இவரை மறந்திருக்கலாம்.. ஆனால் நாடும் என்றும் மறக்காது.. 1962 ல் நடந்த இந்திய சீன போரில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து இந்தியாவை மீட்டு எடுத்து சென்றவர்.. இந்தியாவுக்கு “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்கிற முழக்கத்தை கொடுத்தவர்..
1904 ம் வருடம் காந்தி பிறந்த அதே நாளான அக்டோபர் 2 ம் தேதி உத்திர பிரதேசத்தில் முகள்சாராய் என்கிற கிராமத்தில் பிறந்தவர்..
சாஸ்திரி என்றதும் அவர் பிராமணர் என்று நினைத்துக்கொள்ளவேண்டாம்.. அது ஜாதி பெயர் இல்லை.. அவர் உண்மையில் படித்து வாங்கிய பட்டம்தான்.. காசி வித்யாபீத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு 1925 இல் ‘சாஸ்திரி’ என்ற பட்டத்தைப் பெற்றார்..
அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்..
- சாஸ்திரி தனது பள்ளி நாட்களில் தலையில் ஒரு பை மற்றும் துணியுடன் கங்கை நதியை, தினமும் பல முறை எளிதாகக் கடந்து செல்வார்.
- உத்தரப்பிரதேசத்தில் காவல்துறை மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைச்சராக இருந்தபோது, லத்தி சார்ஜ்க்குப் பதிலாக கூட்டத்தைக் கலைக்க தண்ணீரை பயன்படுத்திய முதல் நபர் சாஸ்திரி ஆவார். அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் பெண்களை நடத்துனர்களாக நியமிக்கும் முயற்சியை மேற்கொண்டார்
- குஜராத்தின் ஆனந்தின் அமுல் பால் கூட்டுறவுக்கு ஆதரவளித்து, 1965 இல் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தை உருவாக்கி, பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிப்பதற்கான தேசிய பிரச்சாரமான வெண்மை புரட்சியின் யோசனையை ஒருங்கிணைத்தார்
- சாஸ்திரி இந்தியாவின் உணவு உற்பத்தியை ஊக்குவிக்கவும் பசுமைப் புரட்சியை ஊக்குவித்தார்
- அவர் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், ஊழலைச் சமாளிக்க முதல் குழுவை அமைத்தார்.
- அவரது மகன் தனது வேலையில் தகுதியற்ற பதவி உயர்வு பெற்றபோது, அது சாஸ்திரியை எரிச்சலடையச் செய்தது, அவர் உடனடியாக பதவி உயர்வை மாற்றுவதற்கான உத்தரவை வெளியிட்டார்
- 1965-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போருக்குப் பிறகு, நாட்டில் கடும் வறட்சி நிலவியது. இந்த நிலைமைகளில் இருந்து வெளிவர, சாஸ்திரி நாட்டு மக்களை ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்குமாறு கேட்டுக் கொண்டார், மேலும் ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற முழக்கத்தை நாட்டிற்கு வழங்கினார்
- பஞ்சாப் நேஷனல் வங்கியில் சாஸ்திரி வாங்கிய ரூ. 5,000 கார் கடன், அவரது திடீர் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி லலிதாவால் அவரது ஓய்வூதியத்திலிருந்து திருப்பிச் செலுத்தப்பட்டது
- இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னாவின் மரணத்திற்குப் பின் முதல் விருது பெற்றவர்
இவ்வளவு சிறப்புமிகு மனிதர்.. 1966 ல் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட (பாகிஸ்தானுடனான 1965 போருக்கு முந்தைய நிலைக்கு இரு ராணுவங்களும் பின்வாங்க ஒப்பந்தம், அதற்க்கு நடுவராக இருந்தது அன்றய சோவியட்) தாஷ்கண்ட் சென்றார்.. கையெழுத்திட்ட மறுநாள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவர்.. இரவு உணவருந்தி சில மணி நேரங்களிலேயே மர்மமான முறையில் இறந்துவிட்டார்..
இதற்க்கான பல மர்மங்களும் அதன் தொடர்பான சந்தேகங்களும் இன்றுவரை தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன..
-விஜ் ஸ்ரீராம்