பாரதத்திலிருந்து பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் – துருக்கி ஈரான் உள்ளிட்ட நாடுகளின் வழியாக ஐரோப்பாவிற்கு தரைவழி போக்குவரத்து கட்டுமானத்தை மேற்கொள்வதற்கான வரைவு மற்றும் முன்மொழிவை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி 20 உச்சி மாநாட்டின் வெற்றி பிரகடனமாக அறிவித்துள்ளார். உலக நாடுகளின் பெரும் கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்த்துள்ள இந்த தரைவழி சாலை போக்குவரத்து வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் கடந்த நூற்றாண்டில் பிரிட்டிஷார் முன்னெடுத்து தோல்வியில் முடிந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்த வரலாற்று பெருமை பாரதத்தையே சேரும்.
இந்த தரைவழி போக்குவரத்து நடைமுறைக்கு வரும் பட்சத்தில் உலகப் பொருளாதாரத்தில் சரக்கு போக்குவரத்து கையாளுகை உள்ளிட்ட விஷயங்களில் இந்த தரைவழி சாலை உலக நாடுகளுக்கு பெரும் பங்களிப்பை வழங்கும். இந்த தரைவழி சாலையை பாரதம் தன் தேசத்தின் பொருளாதாரத்திற்காக தனித்துவமாக தன்னிச்சையாக முன்மொழியவில்லை. மாறாக ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக அனைத்து நாடுகளும் சேர்ந்து தங்களின் ஒருமித்த பங்களிப்போடு இப்படி ஒரு தரைவழி சாலையை கட்டமைக்க வேண்டும் என்ற பிரகடனத்தை முன்மொழிகிறார் . இதன் மூலம் கிடைத்த வாய்ப்பை பாரதத்தின் சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் உலக நாடுகளின் ஒருமித்த வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்ததன் மூலம் பாரதம் என்றைக்குமே சுயநலத்தை புறந்தள்ளி உலக பொது நலத்திற்காக சிந்திக்கும் ஒரு தாய் பூமி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. இது ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதாரத் தேவைக்கும் வளர்ச்சிக்கும் உகந்தது என்பதால் எந்த ஒரு நாடும் இதை எதிர்க்க வாய்ப்பில்லை மாறாக தங்களின் சுய விருப்பு வெறுப்பு கடந்து ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் ஒத்துழைப்பு ஒருங்கிணைப்பு தரும் வாய்ப்புகள் அதிகம்.
தரைவழி சாலையை பாரதம் தன் சுய விருப்பத்திற்காக தன்னிச்சையாக கட்டமைக்க முயன்றால் சீனா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் துருக்கி ஈரான் என்று பல்வேறு நாடுகள் பலவிதமான முட்டுக்கட்டைகள் குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கும். ஐரோப்பா பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அவர்களது உளவு அமைப்புகள் மூலம் பல்வேறு குளறுபடிகளை கொடுத்திருக்கும். பல லட்சம் கோடிகளை இந்த ஒரு திட்டத்தில் முடக்க வேண்டிய கட்டாயமும் பாரதத்திற்கு வந்திருக்கும். இந்த ஒரு திட்டத்தின் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு பாரதம் வளைந்து கொடுத்து போக வேண்டிய அவசியமும் நேர்ந்திருக்கும். ஆனால் இப்படி ஒரு அருமையான திட்டத்தை தெளிவான வரைவோடு முன்மொழிந்து அதை பாரதத்தின் தனிப்பட்ட திட்டமாக இல்லாமல் ஜி 20 நாடுகளின் ஒட்டுமொத்த கூட்டுத்திட்டமாக இதை முன்னெடுப்பதன் மூலம் உலக நாடுகளில் இருந்து ஒட்டுமொத்த எதிர்ப்பையும் விலக்கி வைத்திருக்கிறார். கட்டுமானம் முதலீடு நிர்வாகம் என்று அனைத்திலும் உலக நாடுகளின் ஒட்டுமொத்த பங்களிப்பும் இருக்கும் பட்சத்தில் எங்குமே எதிர்ப்புகள் இடையூறுகள் திட்டமிட்ட குளறுபடிகள் வருவதற்கான காரணிகளை முளையிலேயே அழித்திருக்கிறார்.
இதன் மூலம் பாரதத்தின் தொழில் உற்பத்தி வர்த்தகம் என்று அனைத்தையும் ஐரோப்பாவிற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் ஒரு வலுவான பொருளாதார கட்டமைப்பையும் கொண்டு வருகிறார். இந்த சாலை வழிகள் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அரபு நாடுகளின் வழியாக பயணிக்கிறது . இவை எல்லாம் தீவிரவாத பிடியில் இருக்கும் நாடுகள். குறிப்பாக மத ரீதியாக இன் பாரதத்தின் மீது வன்மமும் விரோதமும் கொண்டிருக்கும் தீவிரவாத குழுக்களின் தலைமை இடங்கள். இந்த நாடுகளின் வழியே இப்படிப்பட்ட ஒரு பன்னாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது அங்குள்ள தீவிரவாதம் கட்டுப்படுத்தப்படும். பல்வேறு இன குழுக்களுக்கு இடையான மோதல்கள் பன்னாட்டு அளவிலான பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிரந்தரமாக கட்டுக்குள் கொண்டு வரப்படும். இதன் மூலம் தெற்காசிய நாடுகளில் ஒரு நிரந்தரமான அமைதியும் பாரதத்திற்கு எல்லைக்கு வெளியே இருக்கும் பொருளாதார தடைகள் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வரும்.
உலகமே உற்று நோக்கும் ஒரு மேடையில் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த பாரதம் ஐரோப்பாவை மத்திய கிழக்கு ஆசியா தரை கடல் நாடுகளின் வழியாக இணைக்கும் சர்வதேச தரைவழி போக்குவரத்து திட்டம் வேறு ஒரு வகையில் சீனா தன்னுடைய தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்காக கட்டமைத்த ஒரு திட்டம். அதன் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வழியாக சீனா பட்டுப்பாதை என்ற வகையில் கட்டமைத்தது. பாகிஸ்தானில் நிலவும் உள்நாட்டு குழப்பம் ஆப்கானிஸ்தான் தீவிரவாதம் முடிவுக்கு வரும் சூழல் உள்ளிட்ட காரணங்களால் சீனாவின் அந்த பட்டுப்பாதை திட்டம் கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்து கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் அடுத்தடுத்த வெற்றிகளை வாரிக் குவித்து வரும் பாரதம் இது போன்ற ஒரு திட்டத்தை முன்மொழிவதும் அதை தனக்கான தனிப்பட்ட திட்டமாக இல்லாமல் உலகின் பொது நலனுக்காக அர்ப்பணிக்கும் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் சரக்கு கையாளுகைக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வருவதும் தன்னலம் பொறாமை சுயநலம் வஞ்சகத்தின் வடிவமாக இருக்கும் சீனாவிற்கு நிச்சயம் ஜீரணிக்க முடியாத விஷயம் தான். அதன் காரணமாகத்தான் ஜி 20 மாநாட்டை சீன அதிபர் புறக்கணித்ததும் அதே நேரத்தில் பலத்த எதிர்ப்பு விமர்சனம் இல்லாமல் அமைதி காப்பதன் காரணம் இதுவே.
இந்த திட்டம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வளவு பங்களிப்பை வழங்குமோ ? அதே அளவில் சீனாவிற்கு மூக்குடைப்பையும் தரும்.தன் நலம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு கொரோனா கால நோய் தடுப்பு மருந்து முதல் உலகப் பொருளாதாரம் வரை அது செய்யும் அத்தனை சில்லறைத்தனங்களையும் பாரதம் தகர்த்தெறிவதும் உலக நாடுகளின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் தன்னாலான அனைத்து பங்களிப்பையும் தாமே முன்வந்து செய்வதுமாக ஒட்டுமொத்த உலகத்தையும் சீனாவை புறந்தள்ளி பாரதத்தின் பக்கம் நிரந்தரமான நண்பர்களாக மாற்றியமைக்கும் சாதுரியத்தை செய்து கொண்டிருக்கிறது. இந்த ஒற்றைக் காரணம் போதும் சீனாவும் சீனா ஆதரவு காங்கிரசும் ஜி 20 மாநாட்டை புறக்கணிக்கவும் இந்த மாநாட்டின் வெற்றி பிரகடனத்தை அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியான விஷயமங்களை செய்வதற்கும் . அந்த வகையில் சீன அதிபர் நாகரிகமாக இந்த விழாவை புறக்கணித்து வன்மத்தை காட்டினாலும் எதிர்ப்பு விமர்சனம் தவிர்த்து உலக அரங்கில் தன் கௌரவம் காத்துக்கொண்டார். அதன் அடியாளாக செயல்படும் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் வெளிநாடுகளில் போய் கூட்டம் கூட்டி ஒப்பாரி வைத்து பாரதத்தின் மானத்தையும் மோடியின் மானத்தையும் வாங்குவதாக சொந்த தேசத்தை அவமதிக்கும் கீழ்த்தரமான செயலால் அவரது கட்சியின் மானத்தையும் அவரது தலைமையின் மானத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார்.