லாவண்யா மரண விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் ஷபீர் அகமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மொட்டை கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மாணவி லாவண்யா, கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுப்புத் தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இந்தியா முழுவதும் கடும் உஷ்ணத்தை கிளப்பி இருக்கிறது. பா.ஜ.க., வி.ஹெச்.பி., இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் மட்டுமே லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், தி.மு.க. ஆசிபெற்ற ஊடகங்கள், பத்திரிகைகள், லாவண்யா மரணம் தொடர்பாக வாய்திறக்காமல் கமுக்கமாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில், லாவண்யா மரணத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர, பெண் எம்.பி. சந்தியா ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா. இக்குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் பத்திரிகையாளர் ஷபீர் அகமது, தனது ட்விட்டர் பக்கத்தில் மொட்டை கடிதம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் பதிவில், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்தோடு வாழ்வதை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம். மற்றும் பலதரப்பட்ட குழுக்கள் அமைப்பதையும், விசாரிப்பதையும் தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ஆனால், அவர் இணைத்திருக்கும் இக்கடிதத்தில் ஊர் பொதுமக்கள் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, யாருடைய கையெழுத்தும் இல்லை. அது ஒரு மொட்டைக் கடிதம் என்பது நிதர்சனமான உண்மை.
ஆகவே, இக்கடிதத்தை மேற்கோள்காட்டி சமூக வலைதளப் போராளிகள் பலரும் பேசுவார்கள். இதைத் தொடர்ந்து, தி.மு.க. ஆசி பெற்ற யூடியூப்கள் செய்திகள் வெளியிடும். தொடர்ந்து, தி.மு.க. தலைவர்கள் பலரும் பேசுவார்கள். இதன் பிறகு, இது குறித்து ஜால்ரா ஊடகங்கள் விவாதம் நடத்தி, லாவண்யாவின் மரணத்திற்கு அவர்களே தீர்ப்பும் சொல்லி விடுவார்கள் என்பது நெட்டிசன்களின் கருத்து. இன்னும் கொஞ்சநாள் போனால், சில ஊர்களிலுள்ள தி.மு.க.வினரை தூண்டி விட்டு மதம் மாற்ற கிறிஸ்தவ பள்ளிகள் கட்டாயப் படுத்தவில்லைனு சொல்ல வைப்பாங்க என்று மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.