மாணவி லாவண்யா மரணம்: உண்மை கண்டறிய பா.ஜ.க. குழு!

மாணவி லாவண்யா மரணம்: உண்மை கண்டறிய பா.ஜ.க. குழு!

Share it if you like it

மாணவி லாவண்யா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த பா.ஜ.க. குழு அமைத்திருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்தவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா. இவரை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தி, கொடுமைப்படுத்தியதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதோடு, லாவண்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன.

ஏற்கெனவே, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டபோது, அது கொலை என்று கூறி ஊர் முழுவதும் பிரசாரம் செய்தனர் தி.மு.க.வினர். ஆனால், தற்போது அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா, மதம் மாற மறுத்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் உட்பட யாருமே வாய்திறக்காமல் மெளனம் காத்து வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், லாவண்யாவின் தந்தை முருகானந்தம் தி.மு.க. உறுப்பினர் என்பதுதான். இதனால் மனமுடைந்த முருகானந்தம், தனக்கு ஆறுதல் சொல்லக் கூட தனது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் யாரும் வரவில்லை என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார். இந்த காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

இந்த நிலையில்தான், மாணவி லாவண்யாவின் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிந்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், மத்தியப் பிரதேச மாநில எம்.பி. சந்தியா ரே தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது பா.ஜ.க.. தலைமை. இக்குழு விரைவில் தமிழகத்துக்கு வந்து நேரில் விசாரணை நடத்தவிருக்கிறது.


Share it if you like it