மதம் மாற மறுத்து மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், மதம் மாறுவீங்களான்னு கேட்பது சாதாரணம்தான் என்று கிறிஸ்தவ பாதிரியார் ஷியாம் ஏசுதாஸ் அளித்திருக்கும் பேட்டி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கிறிஸ்தவ பள்ளியில் படித்த மாணவி லாவண்யா, மதம் மாற மறுத்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. லாவண்யாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்தவ பாதிரியார் ஷியாம் ஏசுதாஸ் என்பவர் Behindwoods என்கிற பிரபல இணையதள ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘மதம் மாறுவீர்களா? என்று கிறிஸ்தவ பள்ளிகளில் கேட்பது ஒரு சாதாரணமான நிகழ்வுதான்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதுதான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், கிறிஸ்தவ பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிரியார் ஷியாம் ஏசுதாஸ் அளித்த பேட்டியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.