மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர்களின் சங்கமம் !

மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர்களின் சங்கமம் !

Share it if you like it

தமிழக சட்டக்கல்லூரி மாணவர் மன்றம் (Forum of Tamilnadu Law Students )
1990களில் தமிழகத்தில் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே அறிவு ஒழுக்கம் ஒற்றுமை வளரவும் சட்டத்தில் தேசிய சிந்தனை வளரவும் உருவாக்கப்பட்டது. FOTLAWS சார்பாக பல்வேறு ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகள் சட்டக் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது.

பிப்ரவரி மாதம் 24ம்தேதி சனிக்கிழமை சட்டக்கல்லூரி மாணவர்களால் சட்டத்திருவிழா என்ற பெயரில் சட்டக் கல்லூரி மாணவர்களின் சங்கமமானது மதுரை தியாகராசர் கல்லூரியில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சி காலை 9.30 மணியளவில் முன்பதிவுடன் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியது. காலை 10 மணிக்கு துவக்க நிகழ்ச்சியில் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி GR.சுவாமிநாதன் அவர்களும் ABVP மாணவர் அமைப்பின் தேசிய செயலாளர் திரு. ஷ்ரவன் B. ராஜ் அவர்களும் ABVP தேசிய செயலாக்க குழு உறுப்பினர் செல்வி. சுசீலா அவர்களும் FOTLAWS மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ. முகுந்தன் அவர்களும் திருவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் ABVP தேசிய செயலாக்க குழு உறுப்பினர் செல்வி.சுசீலா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். FOTLAWS அறிமுகம் மற்றும் சாதனை குறித்து FOTLAWS மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.முகுந்தன் அவர்கள் உரையாற்றினார். ABVP தேசிய மாணவர் அமைப்பின் பணிகள் மற்றும் தேச மறுமலர்ச்சி பணியில் ABVP-யின் பங்களிப்பு குறித்து ABVP தேசிய செயலாளர் ஸ்ரீ. ஷ்ரவன் B ராஜ் அவர்கள் உரையாற்றினார். சிறப்பு விருந்தினர் மரியாதைக்குரிய உயர்நீதிமன்ற நீதிபதி G.R.சுவாமி நாதன் அவர்கள் சட்டத்தின் மகத்துவம் பற்றியும் வழக்கறிஞர் பணியின் மகத்துவம் பற்றியும் தாம் படிக்கும் போதே உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆக வேண்டும் என்ற மிகப்பெரிய கனவு கண்டேன். அது தற்போது நிறைவேறியுள்ளது என்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தினமும் 18 மணிநேரம் உழைத்தார் அதுபோல சட்ட கல்லூரி மாணவர்களாகிய நாமும் கடினமாக உழைக்க வேண்டும். இறுதி மூச்சு உள்ளவரை புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும் சிறப்புரையாற்றினார்கள்.

துவக்க நிகழ்ச்சி நிறைவாக சட்டக்கல்லூரி மாணவர் ஸ்ரீ.நவீன் அவர்கள் நன்றியுரையாற்றினார். அதனை தொடர்ந்து
அயோத்தியா வழக்கு கடந்து வந்த பாதை என்கிற தலைப்பில் உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் திரு.யோகேஸ்வரன் அவர்களும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் பற்றி உயர்நீதி மன்ற வழக்கறிஞர் திரு. லக்ஷ்மி சங்கர் அவர்களும் மாணவர்களுக்கு வழிகாட்டினார்கள்.
மதிய உணவிற்கு பிறகு 2.30 மணியளவில்
குற்றவியல் வழக்குகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர். திரு.கார்த்திகேய வெங்கடசலாபதி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினார்கள். மேலும் சட்டக் கல்லூரி மாணவர்களின் சமுதாய பொறுப்புணர்வு பற்றி அகில பாரத வழக்கறிஞர் சங்க பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.திரு.கேசவன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினார்கள்.

மாலை 4மணிக்கு நிறைவு நிகழ்ச்சியில் மாண்புமிகு நீதியரசர். விக்டோரியா கௌரி அவர்களும் ABVP தென் தமிழக மாநில செயலாளர் ஸ்ரீ. ஹரிகிருஷ்ண குமார் அவர்களும் FOTLAWS மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.முகுந்தன் அவர்களும் கலந்து கொண்டனர். ABVP தமிழக பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து ABVP தென் தமிழக மாநில செயலாளர் ஸ்ரீ. ஹரிகிருஷ்ண குமார் அவர்கள் உரையாற்றினார். FOTLAWS எதிர்கால நிகழ்ச்சிகள் குறித்தும் பணிகள் குறித்தும் FOTLAWS மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.முகுந்தன் அவர்கள் உரையாற்றினார். நிறைவாக சிறப்பு விருந்தினர் மரியாதைக்குரிய உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி. விக்டோரியா கெளரி அவர்கள் தேசிய மறுமலர்ச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் நமது பாரத தேசம் எவ்வாறு இருந்தது என்றும் பாரத தேசத்தின் வளர்ச்சியில் சுதந்திர போராட்ட காலம் முதல் தற்போது வரை வழக்கறிஞர்களின் பங்களிப்பு குறித்தும் உரையாற்றினார்கள். நிறைவாக தேசிய கீதத்துடன் நிகழ்ச்சியானது நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு அமர்வுகளின் முடிவிலும் கேள்வி பதில் இருந்தது மற்றும் கலந்து கொண்ட கல்லூரிகளின் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சட்டத்திருவிழா நிகழ்ச்சியில் தென் தமிழகம் மாநிலம் முழுவதும் 15 கல்லூரிகளில் இருந்து 520க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள்,பேராசிரியர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக சேவகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


Share it if you like it