இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளன. தமிழகத்தில் நேற்று முன்தினம் குன்னூர் அருகே நிகழ்ந்த கோர ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதியின் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சோக நிகழ்வு குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி அவர்கள் கூறியதாவது. பிபின் ராவத் தாய் நாட்டிற்கு உழைத்த ஒப்பற்ற தலைவர், இந்திய, அமெரிக்க இராணுவத்தை வலிமைப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்கியவர், முப்படையை ஒருங்கிணைப்பதில் அவர் மிகவும் முக்கியமான உலக தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் என்று சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார். அமெரிக்க கூட்டு படை தளபதி மார்க் அவர்கள் ஒரு சிறந்த நண்பரை இழந்து விட்டதாக தனது இரங்கல் செய்தியில் தெரிவித்து இருந்தார்.
உலகம் முழுவதும் முப்படை தலைமை தளபதிக்கு இரங்கல் செய்தியும், இந்தியா உட்பட தமிழகம் முழுவதும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், தலைமையில் பல மூத்த வழக்கறிஞர்கள் உட்பட சுமார் பேர் 100 பேர் ராணுவ தளபதிக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வீரவணக்கம் செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1) ஆர்.சங்கரநாராயணன், இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்
2) பிரபாகரன், துணைத் தலைவர், இந்திய பார் கவுன்சில்.
3) ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் இந்தியாவின் உதவி சொலிசிட்டர் ஜெனரல்
4) ஆர்.சி.பால்கனகராஜ் தமிழக பார் கவுன்சில் உறுப்பினர்
5) சு.ஸ்ரீனிவாசன் தலைவர், வி.எச்.ப
6. 100 வழக்கறிஞர்கள்


