ஜெயிக்கிற வரைக்கும் தோக்கலாம் !

ஜெயிக்கிற வரைக்கும் தோக்கலாம் !

Share it if you like it

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக கோப்பையை வென்றது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (நவ.19) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை 240 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வார்னர், ஸ்மித், மார்ஷ் என 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பின்னர் வந்த டிராவிஸ் ஹெட், லபுக்சசேன் அதிரடியாக விளையாடி, ஆட்டத்தை தங்கள் வசம் திருப்பினர். டிராவிஸ் ஹெட் அதிரடி சதம் விளாசினார். லபுக்சசேன் அரை சதம் அடித்தார்.

ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. இந்த தொடரில் லீக் சுற்று, அரையிறுதி சுற்று என அதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் இந்திய அணிக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். அதில், அன்புள்ள இந்திய அணி, உலகக் கோப்பையின் மூலம் உங்களின் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it