இண்டியா கூட்டணி கட்சிகளின் 4-வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கெஜ்ரிவால், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட், மக்களவை தேர்தலுக்கான வியூகம், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஆலோசனை கூட்டத்தில் நிதிஷ்குமார் ஹிந்தியில் பேசியபோது தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி பாலு ஹிந்தி தெரியாததால் விழி பிதுங்கி என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தனர். அப்போது திமுக அமைச்சர் பாலு இனிமேலும் பொறுக்கமுடியாமல் தமிழில் மொழி பெயர்த்து சொல்லுங்கள் என மனோஜ் ஜாவிடம் கேட்டுள்ளார். இதற்கு நிதிஷ்குமார் “நாம் இந்துஸ்தானில் வாழ்கிறோம்.ஹிந்தி நமது தேசிய மொழி அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்”, என்று கூறினார். தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்தி என்றால் எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர் அங்கு ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிடும் என்று மௌனமாக இருந்துள்ளனர்.