திமுகவின் மக்கள் விரோத அராஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம் – அண்ணாமலை !

திமுகவின் மக்கள் விரோத அராஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம் – அண்ணாமலை !

Share it if you like it

ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கடைகளைவிட பணத்திற்காக அதிக கடைகளை மார்க்கெட்டில் அனுமதித்து உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டு வைத்துள்ளார். இதுதொடர்பாக, ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் மொத்தம் 700 கடைகள் தான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் திமுகவினர், வசூல் செய்வதை மட்டுமே கருத்தில் கொண்டு கிட்டத்தட்ட 1300 கடைகளை அனுமதி இன்றி மார்க்கெட் வளாகத்துக்குள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இப்படி அராஜக வசூல் மூலம், மாதம் ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகள், சிறுகுறு வியாபாரிகள், மளிகை கடைக்காரர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இது சம்பந்தமாக பலமுறை திமுக அமைச்சர் முத்துசாமியிடம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வரும் பாராளுமன்ற தேர்தலில், திமுகவின் மக்கள் விரோத அராஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை, மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்க, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்போம். இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it