சிறுமியை நேரில் அழைத்து பாராட்டிய கவர்னர்!

சிறுமியை நேரில் அழைத்து பாராட்டிய கவர்னர்!

Share it if you like it

இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரை நேரில் அழைத்து மணிப்பூர் கவர்னர் இல. கணேசன் பாராட்டியுள்ளார்.

சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில், இந்தியாவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வரும் பியூஸ் மானுஸ், சுந்தரராஜன் வாழும் இதே நாட்டில். பாரத தேசத்திற்கு பெருமை சேர்த்து வரும் இளம் சூற்றுச்சூழல் ஆர்வலர்களும் உண்டு. அந்த வகையில், ஜம்மூ-காஷ்மீர் பகுதியை சேர்ந்த சிறுமி ஜன்னத், தன் தந்தையுடன் இணைந்து உலகப்புகழ் பெற்ற தால் ஏரியை தினமும் தூய்மைப்படுத்தி வந்திருக்கிறார். இவரின், சேவை மனப்பான்மையை போற்றும் விதமாக, ஹைதராபாத் பள்ளி ஒன்று text book பாட புத்தகத்தில் அவரை பற்றி குறிப்பிட்டு பெருமை சேர்த்து இருந்தது.

அந்த வகையில், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் லிசிப்ரியா கங்குஜம். இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து அம்மாநிலத்தில் மேற்கொண்டு வருகிறார். இவரின், சேவையை பாராட்டி இத்தாலி நாடு தனது பாட புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது. இளம் வயதில் இவர் மேற்கொண்டு வரும் பணிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதையடுத்து, மணிப்பூர் மாநில கவர்னர் இல. கணேசன் இவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image
காஷ்மீர் சிறுமி ஜன்னத்தின் சேவையை…! கெளரவித்த ஹைதராபாத் பள்ளி..!
சிறுமி ஜன்னத்


Share it if you like it