லண்டன் தூதரத தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர்… காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் இறப்பு!

லண்டன் தூதரத தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர்… காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் இறப்பு!

Share it if you like it

லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி, மூவர்ண கொடியை கீழே தள்ளிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் பிரிட்டன் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் ஆகியவற்றை இணைத்து காலிஸ்தான் தனிநாடு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிந்த்ரன் வாலே என்பவர் காலிஸ்தானி இயக்கத்தை தொடங்கினார். இவர் உயிரிழந்த நிலையில், காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பை நடத்தி வந்த, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தானி இயக்கத்துக்கு தன்னைத் தானே தலைவராக அறிவித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், பஞ்சாப்பில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றை சூறையாடிய வழக்கில், அம்ரித் பால் சிங்கை போலீஸார் தேடி வந்தனர். அப்போது, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மார்ச் மாதம் லண்டனில் நடந்த போராட்டத்துக்கு, பிரிட்டனில் வசிக்கும் அவதார் சிங் காண்டா என்பவர் தலைமை வகித்தார். இவர் ஷிரோன் மணி அகாலிதளத்தின் துணைத் தலைவரும், இங்கிலாந்தைச் சேர்ந்த சீக்கிய தீவிரவாதியும், காலிஸ்தானி பயங்கரவாதியுமான ஜக்தர் சிங் தாராவின் நெருங்கிய கூட்டாளியாவர்.

இப்போராட்டத்தின்போது, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த இந்திய தேசிய கொடியை கீழே தள்ளி அவமானப்படுத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், அவதார் சிங் காண்டா கடந்த 12-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பிர்மிங்காம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இவர் ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே, இதன் காரணமாக உயரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.


Share it if you like it