லவ் ஜிஹாத் என்ற மாயமான். போதிய விழிப்புணர்வு இல்லாத பாரதத்தின் பொக்கிஷங்கள்.

லவ் ஜிஹாத் என்ற மாயமான். போதிய விழிப்புணர்வு இல்லாத பாரதத்தின் பொக்கிஷங்கள்.

Share it if you like it

பகையாளி குடியை உறவாடி கெடு என்ற கெடுமதியோடு காதல் என்ற பெயரில் பசப்பு வார்த்தைகளும் மதி மயக்கும் தூண்டுகை மூலமும் இந்த மண்ணின் வளரிளம் பிள்ளைகளை வஞ்சக வலை விரித்து திட்டமிட்டு வீழ்த்துவதும் அவர்களின் வாழ்வை சின்னா பின்னமாக்கி அவர்களின் குடும்பத்தை வம்சத்தை நிர்மூலமாக்கி அதன் மூலம் தங்களின் மத மாற்றத்தையும் மத பயங்கரவாதத்தையும் நிலை நிறுத்தும் லவ் ஜிஹாத் தின் கொடூர முகம் உணர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.இந்த மண்ணையும் மக்களையும் மீண்டும் அடிமைப் படுத்தும் உளவியல் யுத்தமே லவ் ஜிஹாத் என்ற உண்மையை வளரிளம் தலைமுறைக்கு புரிய வைப்போம்.வளரிளம் குழந்தைகள் – பெற்றோர் – ஆசிரியர் – சமூகம் – அரசு என்று அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து லவ் ஜிஹாத் சதியை முறியடித்து சந்ததிகளை காக்க சபதம் ஏற்போம்.

ஒரு குடும்பத்தை சீரழிக்க வேண்டுமானால் அந்த குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை சீரழித்தால் போதும். ஒரு குடும்பத்தை பழிவாங்க வேண்டும் எனில் அந்த குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாலே போதும் என்ற வகையில் காலம் காலமாக பெண்களை மையமாக வைத்து தான் நன்மை தீமை சுழல்கிறது . அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இனத்தை மொத்தமாக இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிக்க வேண்டும் எனில் அந்த சமூகம் சார்ந்த பெண்களை மடைமாற்றம் செய்தால் போதும். வளரிளம் பெண்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாலே போதும். குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்த சமூகத்தை மொத்தமாக சீரழிக்கலாம் அல்லது தங்களது கட்டுப்பாட்டின் கீழ் பணயமாக்கலாம்.

இதன் பொருள் யாதெனில் பெண்களை மையமாக கொண்டு இவ்வுலகில் எந்த ஒரு நிகழ்வையும் வெற்றிகரமாக சாதிக்க முடியும் என்பதே. அதனால் தான் இவ்வுலகில் நன்மை – தீமை இரண்டிற்கும் பெரும் பங்கு வகிப்பது பெண் என்னும் சக்தி என்பதால் அதை ஆக்கபூர்வமான சக்தியாக பயன்படுத்த வேண்டும் . அந்த சக்தி நேர்மறை சிந்தனை நல்லெண்ணமும் கொண்டவர்களிடத்தில் மட்டுமே வசப்பட வேண்டும் என்று காரணம் கொண்டே காலம் காலமாக நம் சமூகம் பெண்களை தன் குடும்பத்தின் பொக்கிஷமாக தன் சமூகம் இனம் சார்ந்த பண்பாடு – கலாச்சார அடையாளமாக தேசத்தின் தன்மானமாக போற்றி பாதுகாத்து வருகிறது.

இந்த வாழ்வியல் தத்துவத்தை தான் மஹா பாரதம் – இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தொடங்கி இந்த மண்ணின் சங்க கால இலக்கியங்கள் வரை படிப்பினையாக தருகிறது. ஆனால் நாம் தான் அதை எல்லாம் விட்டு வெகுதூரம் போய் இன்று அதன் பலனை அறுவடை செய்கிறோம். இந்த அடிப்படையில் தான் நாடக காதல் – மதமாற்றம் – மத பயங்கரவாதம் உள்ளிட்ட சமூக விரோத – தேச விரோத – மனித குல விரோத செய்கைகளை முன்னெடுக்கும் கொடுங்கோலர்கள் தங்களது இச்சைக்காகவும் – வம்சவிருத்திகாவும் தங்களது கொடூரமான எண்ணங்களை இலக்குகளை அடைவதற்கான ஒரு பகடையாகவும் இந்து சமூகம் சார்ந்த பெண்களை பயன்படுத்துகிறார்கள்.

இஸ்லாமிய – கிறிஸ்தவ படையெடுப்புகளின் போது அவர்கள் நம் மன்னர்களை மக்களை அடிமைப்படுத்த அதிக அளவில் பணயம் ஆக்கியது நம் குல பெண்களின் தன்மானத்தை தான். அவ்வகையில் தம் குடும்பப் பெண்களின் மானம் சந்ததிகளின் உயிர் காக்கவே பெரும்பாலானோர் அந்நியர்களிடம் அடங்கிப் போக நேரிட்டது. அது நம்மவர்களின் கோழைத்தனம் அல்ல. அந்நியர்களின் எந்த தர்மத்திற்கும் கட்டுப்படாத நெறிமுறை அற்ற யுத்த முறை காரணமாகவே எந்த நிலையிலும் யுத்த தர்மம் மீறாத நம்மவர்கள் வீழ நேரிட்டது.

வரலாற்றில் பல நூறாண்டுகளாக கடந்து வந்த இந்த கோர முகத்தை இன்றளவும் முழுமையாக உணராத நவீன கால சமூகத்தில் இந்த ஆக்கிரமிப்பும் அடிமைப்படுத்தும் எண்ணமும் இந்த தேசத்தின் எதிர்காலமாகவும் வருங்கால சந்ததியின் நம்பிக்கையாகவும் இருக்கும் பெரும்பான்மை இந்து சமூக பெண்களைக் குறி வைத்து முற்போக்கு சிந்தனை – பகுத்தறிவு – பொதுவுடமை – பெண் விடுதலை என்று பல பெயர்களில் பல முகமூடிகள் அணிந்து வந்தாலும் அவர்கள் அத்தனை பேரின் நோக்கமும் நாடகக் காதல் என்ற பெயரில் லவ் ஜிஹாத் – மதமாற்றம் – மத பயங்கரவாதம் என்ற அளவில் நம் மண்ணையும் மக்களையும் ஆக்கிரமிக்கும் அழிக்கும் எண்ணமே மேலோங்கி நிற்கிறது. உண்மையான வரலாறும் நம் தேசத்தின் கடந்த கால கண்ணீர் பக்கங்களும் அறியாது போன இன்றைய தலைமுறைக்கு இந்த விஷமிகள் தான் நண்பர்களாக – நலன் விரும்பிகளாக தெரிகிறார்கள். அதன் விளைவு எளிதில் அவர்களிடம் அகப்பட்டு தானும் சீரழிந்து தன் சந்ததிகள் குடும்பத்தையும் நிர்மூலமாக்கி விடுகிறார்கள்.

இந்து விரோதம் – இந்திய விரோதம் பேசும் அத்தனை கட்சிகளும் அமைப்புகளும் தனி நபர்களும் ஊடகமும் இவற்றையெல்லாம் வெளிக்கொணர்ந்து மக்களை விழிப்படைய செய்வதற்கு பதிலாக தங்களின் சுய லாபம் – வாக்கு வாங்கி அரசியலுக்காக இவர்களை எல்லாம் பெரும் தியாகிகள் போலவும் உலக உத்தமர்கள் போலவும் பொய்யான ஒரு மாயத் தோற்றத்தை கருத்தியலாக பரப்பி இந்த தேசத்தின் சீரழிவிற்கும் இந்த மண்ணின் மைந்தர்களை அவர்களின் வாழ்வியலில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்தி அடிமைப்படுத்தும் தீயவர்களின் கெடு மதிக்கு முழுமையாக துணை நிற்கிறது.

பெரும் அரசியல் கட்சிகளும் தேசிய கட்சிகள் என்ற தங்களின் மாண்பை மறந்து தங்களின் சுய லாபத்திற்காக சிலர் இதை உரம் போட்டு வளர்ப்பதும் , சிலர் இதைக் கண்டும் காணாமல் போகும் வஞ்சகமும் நீடிக்கிறது. இதைப் பற்றி எல்லாம் இன்றளவும் ஆர் எஸ் அதன் பரிவாரங்கள் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கட்சிகள் தவிர வேறு யாரும் பேசியதாகவோ விமர்சனம் செய்ததாகவும் கண்டித்ததாகவும் செய்திகள் கூட கிடையாது. ஆனால் அவர்களுக்கு இங்கு கிடைக்கும் பெயர் காவி பயங்கரவாதி என்ற அடைமொழி மட்டுமே. ஆனால் அவர்கள் எந்த பெரும்பான்மை சமூகத்தின் பெண்களை சந்ததிகளை பாதுகாக்க வேண்டும் என்று வீதிக்கு வந்து போராடுகிறார்களோ ? அந்த பெரும்பான்மை சமூகமே அவர்களின் கூக்குரலை செவி மடுக்காமல் ஆடு கசாப்பு கடைக்காரன் பின்னே போவதைப் போல இந்த லவ் ஜிஹாத் விஷமிகளின் வலையில் விழுவதும் எச்சரிக்கை செய்யும் இந்து அமைப்புகளை எள்ளி நகையாடுவதும் பின்பு பல துண்டுகளாக பிணமாக வீதியிலோ வீட்டில் குளிர்சாதன பெட்டியில் கண்டெடுக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

இதில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசாங்கம் கடுமையான சட்ட திட்டங்களை இயற்றி உரிய கண்காணிப்பை செய்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற கடமை இருந்தாலும் அவர்களினும் மேலான முதல் கடமை பெற்றோர்களுக்கு உண்டு. நம்முடைய கலாச்சாரம் பண்பாடு சார்ந்த வழிமுறைகள் எவ்வளவு மகத்தானது? என்பதை நம் சந்ததிகளுக்கு தெரியப்படுத்த வேண்டியது அவர்களே. நம் பாரம்பரிய வாழ்வியலின் மகத்துவமும் அதை விட்டு விலகிப் போனால் அது எவ்வளவு பெரிய ஆபத்தை அச்சுறுத்தலை நமக்கு விளைவிக்கும் ? என்பதையும் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லி வளர்க்காமல் போனதன் விளைவு தான் கண் முன்னே இன்று நாம் காணும் சீரழிவுகள் என்பதை உணர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளை நம்முடைய பண்பாட்டு வழியில் கலாச்சார சமய கல்விகளோடு வளர்க்கத் தொடங்குவதே நிரந்தர தீர்வாக இருக்கும்.

மேலும் மாற்று மதம் சார்ந்தவர்கள் நம்மை ஆக்கிரமித்து அதன் மூலம் நம் மண்ணை அபகரிக்க செய்யும் சதிகளை எல்லாம் சமயத்தின் பெரியோர்கள் வரலாற்று உதாரணங்களோடும் நம் இதிகாச புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்வியல் தத்துவங்களோடும் எடுத்துச் சொல்லி உரிய வகையில் சமூகத்தை வழிநடத்த வேண்டும். அனைத்திற்கும் மேலாக இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும் இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் நாம் நன்மை செய்யாவிட்டாலும் கூட தீமை செய்யாமல் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் வாழும் நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடாது. துரோகிகளுக்கு துணை போகவும் கூடாது என்ற குறைந்தபட்ச மனித உணர்வோடு இருந்தாலே போதும்.

இன்றைய சூழலில் நமக்கு தேவை போலி பெண்ணியம் பேசும் காதலர் தினம் – ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் என்ற சீரழிவு அல்ல. வரலாற்றில் கடந்து வந்த படிப்பினைகளை உணர்ந்து அவை மீண்டும் நம்மை பீடிக்கா வண்ணம் எச்சரிக்கையாக இருப்பதும் நம் சந்ததிகளை அதே எச்சரிக்கை உணர்வோடு வளர்ப்பதுமே நமது முதல் கடமை. மதம் என்ற ஒற்றை காரணம் வைத்து பயங்கரவாதம் ஒன்றையே இலக்காகக் கொண்டவர்களிடம் மனிதத்தை நாம் எதிர்பார்ப்பது நம்முடைய முட்டாள்தனம் என்பதால் நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்துகளை நாம் உணர்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் உரிய வகையில் தற்காத்துக் கொள்வதே இப்போது நம் முன்னிருக்கும் ஒரே வாய்ப்பு. சிந்தித்து செயல்படுவோம்.


Share it if you like it