உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக செய்தியாளர் ஒருவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் காதலர் தினத்திற்கு வாழ்த்து சொல்வீர்களா என்று கேட்டதற்கு, அவர்களுக்கு (இளைஞர்களுக்கு) எப்போதும் வாழ்த்து இருக்கு. என்னனுடைய திருமணமும் காதல் திருமணம் தான். எல்லா இளைஞர்களும் நன்றாக இருக்க வேண்டும். அவர்களுடைய வாழ்க்கை துணையை அவர்கள் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள். அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் காதல் திருமணம் என்பது திமுக காங்கிரஸ் போல இருக்கக்கூடாது. மோடி பாஜக போல் இருக்க வேண்டும் என்று கூறினார். இந்த காணொளியானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.