கர்நாடகாவில் ஹிந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்த முஸ்லிம் நபர், தனக்கு ஏற்கெனவே திருமணமான விஷயம் தெரிந்து விவாகரத்து கோரியதால் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கொடூர சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “இந்தியாவில் லவ்ஜிகாத் என்கிற ஆயுதத்தை இஸ்லாமிய அடிப்படைவாத இளைஞர்கள் எடுத்திருக்கிறார்கள். அதன்படி, ஹிந்து பெண்களை காதலிப்பது போல நடித்து திருமணம் செய்து விட்டு, அவர்களை விபசாரத்தில் தள்ளுவது ஒரு ரகம். அதேபோல, இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த செல்வந்தர்களுக்கு அடிமை ஊழியம் செய்வதற்கு விற்பது இன்னொரு ரகம். இந்த லவ்ஜிகாத் இந்தியாவில் தொடர்கதையாகி வருகிறது. இதை மத்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தாவிட்டால், மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும். தமிழகத்தில் லவ்ஜிகாத் என்கிற பெயரில் உலா வரும் இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் ஒன்று, மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைப்பட்டியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியை காதல் நாடகமாடி கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்து, விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கர்நாடகாவில் மற்றொரு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது” என்றார்கள்.
விஷயம் இதுதான்… கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபூர்வ பூரணிக். பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், வேலை விஷயமாகவும், கடைவீதிகளுக்கும் ஆட்டோவில் சென்று வந்திருக்கிறார். அப்படி ஒரு முறை ஆட்டோவில் சென்றபோது, முகமது இஜாஸ் என்ற ஆட்டோ டிரைவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அப்போது, தானும் ஒரு பட்டதாரிதான் என்றும், ஓய்வு நேரத்தில் ஆட்டோ ஓட்டிக் கொண்டு, மேல் படிப்பை தொடர்ந்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இதை நம்பிய அபூர்வாவும், இஜாஸுடன் சகஜமாகப் பழகி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இஜாஸ் தனது காதலை வெளிப்படுத்த, அபூர்வாவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால், இதற்கு அபூர்வாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. எனினும், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி 2018-ல் இஜாஸை திருமணம் செய்து கொண்டார் அபூர்வா. திருமணத்துக்குப் பிறகு அபூர்வாவை முஸ்லிமாக மாறும்படி வற்புறுத்திய இஜாஸ், அவரது பெயரையும் அர்ஃபா பானு என்று மாற்றி வைத்தார். மேலும், முற்றிலுமாக ஹிந்து மரபுகளை கைவிட்டுவிட்டு, பர்தா, ஹிஜாப் போன்ற ஆடைகளை அணிந்து இஸ்லாமிய மரபுகளைக் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்தி இருக்கிறார். இஜாஸ் சொன்னபடியெல்லாம் செய்திருக்கிறார் அபூர்வா.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆச்சாரமான பிராமணப் பெண்ணான அபூர்வாவை, இறைச்சி, பிரியாணி ஆகியவற்றை சாப்பிடும்படி துன்புறுத்தியதுதான் கொடூரத்தின் உச்சம். எனினும், இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார் அபூர்வா. இந்த சூழலில், அபூர்வா – இஜாஸ் தம்பதிக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். இதன் பிறகு, அபூர்வாவின் பெற்றோரும் பழைய சம்பவங்களை மறந்துவிட்டு, மகள், மருமகனுடன் சமரசமாகி விட்டனர். இந்த நிலையில்தான், இஜாஸுக்கு ஏற்கெனவே திருமணமாகி, 3 குழந்தைகள் இருக்கும் விவரம் அபூர்வாவுக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அபூர்வா, இஜாஸை விட்டு பிரிந்து, தனது 2 வயது மகனுடன் கதக் மாவட்டத்திலுள்ள தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று விட்டார்.
ஆனால், இஜாஸ் விடவில்லை. அடிக்கடி அபூர்வாவின் பெற்றோர் வீட்டுக்குச் சென்று தகராறு செய்திருக்கிறார். மேலும், அபூர்வாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்திருக்கிறார். இதனால் மனம் வெறுத்த அபூர்வா, விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த சூழலில்தான், மார்ச் 10-ம் அபூர்வா சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, விரட்டிச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் இஜாஸ். இதில், அபூர்வாவின் உடலில் 23 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த அபூர்வாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கவலைக்கிடமான நிலையில் அபூர்வா சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம்தான் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, லவ்ஜிகாத்துக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.