மீடியானுக்கு கிடைத்த வெற்றி; வருத்தம் தெரிவித்த நியூஸ் 7!

மீடியானுக்கு கிடைத்த வெற்றி; வருத்தம் தெரிவித்த நியூஸ் 7!

Share it if you like it

நியூஸ் 7 தமிழ் ஊடகத்தில் தேசிய கொடி குறித்து வி.சி.க. மூத்த தலைவர் வன்னியரசு தெரிவித்த கருத்திற்கு தற்போது அந்த ஊடகம் தனது வருத்தத்தை தெரிவித்து இருப்பது மீடியானுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவை உளவு பார்க்கப்போகும் சீன கப்பல்: எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்திய அரசு? என அண்மையில் பிரபல ஊடகமான நியூஸ் 7 தமிழ் ஏற்பாடு ஊடக விவாதம் ஒன்றினை நடத்தி இருந்தது. இதில், வி.சி.க. மூத்த தலைவர் வன்னியரசு, முன்னாள் ராணுவ உயர் அதிகாரி கர்னல் தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பேசிய வன்னியரசு வழக்கம் போல பாரதப் பிரதமர் மோடி மற்றும் தேசத்திற்கு எதிராக பேசினார். இதனிடையே, இல்லம் தோறும் தேசிய கொடி ஏற்றுவது குறித்து மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தேசிய கொடியை அவமதிக்கும் நோக்கில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, வன்னியரசின் கருத்திற்கு தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்யும் வகையில், தேசிய கொடியை மதிக்காத காரணத்தால் ஒரு இராணுவ வீரனாக மற்றும் ஒரு இந்திய குடிமகனாக இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன். நியூஸ் 7 ஊடக விவாதத்தில் இனி எப்போதும் நான் கலந்து கொள்ள மாட்டேன் என அதிரடியாக கூறிவிட்டு கர்னல் தியாகராஜன் வெளியேறி இருந்தார்.

இச்சம்பவம், ராணுவ வீரர்கள், தேச பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, தேசிய கொடியை அவமதித்த வன்னியரசின் கருத்திற்கும், நியூஸ் 7 தமிழுக்கும் மீடியான் தனது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தது.

இதனை தொடர்ந்து, நெட்டிசன்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் தங்களது கடும் எதிர்ப்பினை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, கர்னல் தியாகராஜனை தொடர்பு கொண்டு நியூஸ் 7 தமிழ் தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து, தேசிய கொடி குறித்து மீடியான் இணையதள ஊடகத்திற்கு தியாகராஜன் அளித்த பேட்டியில் மீடியான் குழுவிற்கு தனது நன்றியினை தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it