பா.ஜ.க மூத்த தலைவரும் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். காந்தியின் வாகனத்தை நிறுத்தி பா.ஜ.க கொடியை கழற்றுமாறு காவல்துறை வற்புறுத்தி சம்பவம் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பகீர் குற்றச்சாட்டினை சுமத்தி இருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக காவல்துறையினர் தொடர்பான சம்பவங்களும், செய்திகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
வியாசர்பாடியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் என்பவர் முக கவசம் அணியாமல் வந்ததற்காக, காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்று பிளாஸ்டிக் பைப்பால் மிக கடுமையாக தாக்கிய காணொளி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில்., பா.ஜ.க மூத்த தலைவரும் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். காந்தியின் வாகனத்தை நிறுத்தி. பா.ஜ.க கொடியை கழற்றுமாறு காவல்துறையினர் வற்புறுத்தி அடாவடி சம்பவத்தில் ஈடுபட்டது. அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளியை நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். அதன் லிங்க் இதோ.