மதம் மாறி திருமணம்… மறுத்தால் ஆசிட் வீச்சு: ஹிந்து பெண்ணுக்கு மிரட்டல்… மன்சூரி கைது!

மதம் மாறி திருமணம்… மறுத்தால் ஆசிட் வீச்சு: ஹிந்து பெண்ணுக்கு மிரட்டல்… மன்சூரி கைது!

Share it if you like it

மத்தியப் பிரதேச மாநிலத்தில், இஸ்லாத்துக்கு மதம் மாறி தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் ஆசிட் வீசுவேன் என்று, ஹிந்து பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த, மோனு என்கிற ஜன்பாஸ் மன்சூரியை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் கிழக்கு நிவார் மாவட்டம் கந்த்வா அருகேயுள்ள ஆஷாபூர் இந்திரா சர்க்கிள் பகுதியைச் சேர்ந்தவர் மோனு என்கிற ஜன்பாஸ் மன்சூரி. அதே பகுதியில் வசிக்கும் 19 வயதான ஹிந்துப் பெண், கந்த்வாவிலுள்ள ஒரு நர்ஸிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இஸ்லாமிய இளைஞரான மோனு, மேற்கண்ட ஹிந்துப் பெண்ணை கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். ஆனால், அப்பெண் மோனுவின் காதலை ஏற்கவில்லை. எனினும், அப்பெண் கல்லூரிக்குச் செல்லும் போதெல்லாம், பின்தொடர்ந்து வந்திருக்கிறார் மோனு.

எனவே, இதுகுறித்து அப்பெண் தனது பெற்றோரிடம் புகார் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, அப்பெண்ணின் பெற்றோர், மோனுவின் பெற்றோரிடம் சொல்லி கண்டித்து வைத்தனர். ஆனாலும், மோனு அடங்கவில்லை. “இஸ்லாத்துக்கு மதம் மாறி என்னை திருமணம் செய்துகொள். இல்லையெனில் உன்மேல் ஆசிட் வீசிவிடுவேன்” என்று தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார். மேலும், அப்பெண்ணின் செல்போன் நம்பரை எப்படியோ வாங்கி, தான் துப்பாக்கியுடன் இருக்கும் போட்டோவை போட்டு, மரியாதையாக மதம் மாறி என்னை திருமணம் செய்துகொள். இல்லாவிட்டால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி கல்லூரிக்குச் சென்றுவிட்டு மாலை 3 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அந்த ஹிந்துப் பெண். அப்போது, பின்தொடர்ந்து வந்த மோனு, அப்பெண்ணை வழிமறித்து நிறுத்தி இருக்கிறார். பிறகு, அப்பெண்ணின் மீது பூக்களைத் தூவி, என்னை திருமணம் செய்துகொண்டால், இப்படி பூமழை பொழியும். இல்லையேல் ஆசிட் மழை பொழியும் என்று மிரட்டி இருக்கிறார். மேலும், தனது பைக்கில் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டு, அதிவேகத்தில் சென்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் பைக்கில் இருந்து கீழே குதித்திருக்கிறார்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள், ஓடிவந்து அப்பெண்ணை மீட்டனர். இதனால் பயந்துபோன மோனு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். பின்னர், அப்பெண் இது குறித்து ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, ஹிந்து அமைப்பினர் வந்து, அப்பெண்ணை அழைத்துக் கொண்டு சென்று போலீஸில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து மோனுவை கைது செய்தனர். இஸ்லாமிய இளைஞர் ஒருவர், ஹிந்து பெண்ணை மதம் மாறாவிட்டால் ஆசிட் வீசி கொல்வேன் என்று மிரட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it