பொது சிவில் சட்டதை வரவேற்கிறேன். இந்த சட்டம் அனைவருக்கும் நல்லது என்று மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கூறியிருக்கிறார்.
மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. இச்சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் பலவும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலரும் வரவேற்புத் தெரிவித்திருக்கிறார்கள். எனினும், தமிழகம் உள்ளிட்ட சில மாநில முதல்வர்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. பொது சிவில் சட்டத்தை வரவேற்கிறேன். இந்த சட்டம் அனைவருக்கும் நல்லது. சாதாரண பொது மக்கள் முதல் ஆன்மீகவாதிகள் வரை அனைவருக்கும் பொதுவான இந்தச் சட்டத்தை வரவேற்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.