தி.மு.க.வினரின் ‘ஹீரோ’ அண்ணாமலை: கதறும் உ.பி.ஸ்; கலக்கத்தில் அறிவாலயம்!

தி.மு.க.வினரின் ‘ஹீரோ’ அண்ணாமலை: கதறும் உ.பி.ஸ்; கலக்கத்தில் அறிவாலயம்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தி.மு.க.வினர் மத்தியில் ஹிரோவாக மாறி வருகிறார். அந்த வகையில், மதுரையில் அண்ணாமலையின் காரை நோக்கி தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஓடோடி வந்து, கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்த சம்பவம், இதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும் அண்ணாமலை, இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறார். இவர், தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, ஏராளமான இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைந்ததே இதற்கு சாட்சி. அதேபோல, தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அண்ணாமலையின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். அதேபோல, மாற்றுக் கட்சியினர் பலரும் அண்ணாமலையுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். இன்னும் பலர் அண்ணாமலையுடன் ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். அந்தளவுக்கு அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் அண்ணாமலை.

இந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று மதுரைக்குச் சென்றிருந்தார் அண்ணாமலை. அப்போது, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகேயுள்ள காய்கறி மார்க்கெட்டை ஆய்வு செய்யும்படி, வியாபாரிகளும், கட்சி நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்ததால், அங்கு சென்று ஆய்வு செய்தார் அண்ணாமலை. ஆய்வை முடித்துவிட்டு திரும்பியபோது, தி.மு.க. கரை வேட்டி கட்டிய நபர் ஒருவர் அண்ணாமலையின் காரை நோக்கி ஓடிவந்தார். இதைப் பார்த்த அண்ணாமலை, காரை நிறுத்தும்படி டிரைவரிடம் கூறவே, அவரும் காரை நிறுத்தினார்.

பின்னர், அண்ணாமலையைப் பார்த்து கையை கும்பிட்டபடியே வந்த அந்த தி.மு.க. பிரமுகர், “உங்கள் பேச்சுக்களை நிறைய கேட்டிருக்கிறேன். நியாயமாக பேசுகிறீர்கள். விளக்கமாக சொல்கிறீர்கள். எங்கள் குடும்பமே தி.மு.க.தான். இருந்தாலும், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். இதேபோலவே தொடர்ந்து செயல்படுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்று கூறி கை கொடுத்தார். பதிலுக்கு அண்ணாமலையும் கையெடுத்து கும்பிட்டதோடு, கைகொடுத்து நன்றி கூறி அவரை அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அனைத்து தரப்பினரையும் நெகிழவைத்திருக்கிறது. அதேசமயம், அண்ணாமலை மீதான தி.மு.க.வினரின் ஈர்ப்பு, அக்கட்சியின் தலைமையை கலக்கத்தில் ஆழ்த்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.


Share it if you like it