இந்த நிழற்குடை அமைக்க 5 லட்சம் ரூபாயா என்று கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசனை, மதுரை மக்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
மதுரை தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன். தர்மபுரியைச் சேர்த்த தி.மு.க. எம்.பி. செந்தில்குமாரைப் போலவே, இவரும் பப்ளிசிட்டி விரும்பி. தாங்கள் நின்றாலும், நடந்தாலும் அதையும் சமூக வலைத்தளத்தில் போட்டோ பிடித்துப் போடும் அளவுக்கு பப்ளிசிட்டி பிரியர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அட அவ்வளவு ஏன், மதுரை சித்திரை திருவிழாவில் நீர்மோர் கொடுத்ததை எல்லாம் போட்டோ பிடித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தவர்தான் இந்த சு.வெங்கடேசன்.
இவர் சமீபத்தில் போட்ட ஒரு பதிவுதான் அவருக்கே ரிவர்ஸாகி இருக்கிறது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அருகே எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் செலவில் பயணியர் நிழற்கொடை அமைக்கப்பட்டிருந்தது. இதை போட்டோ எடுத்த எம்.பி. வெங்கடேசன், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கெத்தாக பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த மதுரை மக்கள் கொந்தளித்து விட்டனர். 10 பேர் கூட அமர முடியாத இந்த நிழற்குடைக்கு 5 லட்சம் ருபாயா? வெறும் 50,000 ரூபாய் கூட செலவாகி இருக்காதே என்று எம்.பி. வெங்கடேசனை வசைபாடினர்.
இதையடுத்து, நிழற்குடையை ஆய்வு செய்து, அதையும் போட்டோ எடுத்த வெங்கடேசன், மேற்கண்ட பணியின் திட்ட மதிப்பீடு, வரைபடம் உள்ளிட்ட நிர்வாக விபரங்களை மாநகராட்சியிடம் கேட்டிருப்பதாக மீண்டும் ஒரு பதிவை போட்டிருக்கிறார். இதற்கும் மதுரை மக்கள் வசைபாடி வருகின்றனர். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கும் பணத்தில் நடக்கும் வேலையைக்கூட கண்காணிக்க முடியாமல் அப்படி என்னதான் பிஸியா இருக்காரோ எம்.பி. வெங்கடேசன் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.