இனி ச.ம.க இல்லை : எப்போதும் பா.ஜ.க தான் !

இனி ச.ம.க இல்லை : எப்போதும் பா.ஜ.க தான் !

Share it if you like it

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுடன், தனது சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க நானும், சமக கட்சியும் இருக்க வேண்டும் என விரும்பினார்.

எல்லாம் நடந்து முடிந்த பிறகு நேற்று நள்ளிரவு 2 மணிக்கு சரத்குமார் என்னை போனில் அழைத்தார். நான் ஒரு கனத்த இதயத்தோடு, துணிவோடு, அன்போடு ஒரு முடிவை எடுத்திருப்பதாக சொன்னார். அதாவது சமத்துவ மக்கள் கட்சியை முழுவதுமாக பாஜகவில் இணைத்து 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்காக பாடுபடப் போகிறேன்” என சரத்குமார் சொன்னதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய சரத்குமார், “நாட்டின் வளர்ச்சி மற்றும் வருங்கால இளைஞர்களின் நலனுக்காக கட்சி இணைப்பு நடைபெற்றுள்ளதாக சரத்குமார் அறிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் தொடங்கினார்” என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *