ஸ்டாலின் தூக்கத்தை கெடுக்கிறதே தி.மு.க.காரங்க வேலையாப்போச்சு: லேட்டஸ்ட் மதுரை கவுன்சிலர்!

ஸ்டாலின் தூக்கத்தை கெடுக்கிறதே தி.மு.க.காரங்க வேலையாப்போச்சு: லேட்டஸ்ட் மதுரை கவுன்சிலர்!

Share it if you like it

மதுரை மாநகராட்சி பகுதியில் வீடு கட்டும் நபரை, யாரைக் கேட்டு நீ வீடு கட்டுகிறாய் என்று மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் மிரட்டும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாநகராட்சி 41-வது வார்டு பகலவன் பூக்காரத் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். பாண்டிச்சேரி மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த வார்டு கவுன்சிலராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த செந்தாமரைக்கண்ணன். இந்த சூழலில், பகலவன் பூக்காரத் தெருவில் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் மணிகண்டன் வீடு கட்டி வருகிறார். பாரத பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இந்த வீடு கட்டப்பட்டு வருகிறது. நிலைமை இப்படி இருக்க, மாநகராட்சி 42-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் செல்வியின் கணவர் கார்மேகம், மேற்படி மணிகண்டன் வீடு கட்டி வரும் பகலவன் பூக்காரத் தெருவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு, மணிகண்டன் பெற்றோரிடம், கவுன்சிலரான தன்னைக் கேட்காமல் எப்படி வீடு கட்டலாம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு, எதுவாக இருந்தாலும் தனது மகனிடம் பேசிக்கொள்ளும்படி கூறியிருக்கிறார்கள்.

பின்னர், இதுகுறித்து பாண்டிச்சேரியில் இருக்கும் தங்களது மகன் மணிகண்டனுக்கும் போன் செய்து, கவுன்சிலர் கணவர் கார்மேகம் வந்து சென்ற தகவலையும் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, கார்மேகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு மணிகண்டன் பேசியிருக்கிறார். அப்போது, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மணிகண்டன், நீங்க யாருண்ணே என்று கேட்கிறார். அதற்கு, என் பேரு கார்மேகம், செல்வி கார்மேகம் என்கிறார். சொல்லுங்கண்ணே என்ன விஷயம்ணே என்று கேட்கிறார் மணிகண்டன். உடனே, நீங்க மோடி திட்டத்தில் வீடு கட்டுறீங்க. பிளானும் வாங்கல. வீடு கட்டயில என்னய ஒரு வார்த்தை கேட்கணுமா கேட்கக் கூடாதா? நாளைக்கு லைன் குடுக்கயில என்று இழுக்கிறார். உடனே, இது 41-வது வார்டுலதானே வருது, இதுக்கு கவுன்சிலர் நீங்களா என்று கேட்கிறார். ஆமாம் என்று கார்மேகம் சொல்ல, சரி, நாங்க வீடு கட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்கிறார் மணிகண்டன்.

ஆமா, எனக்கு பிரச்னை இருக்கு. என்னய கேட்காம நீங்க வீடு கட்டக் கூடாதுங்க. வார்டு கவுன்சிலர்கிட்ட கேட்டுத்தாங்க வீடு கட்டணும் என்கிறார். பதிலுக்கு, நீங்க வார்டு கவுன்சிலரான்ணே என்று மணிகண்டன் கேட்க, அப்புறம் யாரு கவுன்சிலரு என்று கார்மேகம் கறார் காட்ட, இல்லண்ணே எனக்குத் தெரியலண்ணே, அதான்ணே கேட்டேன். ஏன்னா நா பாண்டிச்சேரியில இருக்கேன் என்று சொல்லிறார் மணிகண்டன். உடனே, நீ நேர்ல வா, இவ்வளவு தூரம் பேசுறதுக்கு நீங்க யாரு, நேர்ல வாங்க மொதல்ல என்று எகிறுகிறார் கார்மேகம். அதற்கு, அது எங்க வீடுங்க என்று மணிகண்டன் சொல்ல, அது உங்க வீடுங்கிறதுக்கு என்ன அத்தாட்சி வச்சிருக்கீங்க என்று திமிராகக் கேட்கிறார் கார்மேகம். பதிலுக்கு மணிகண்டனும் திமிராக, நீங்க கவுன்சிலர்கிறதுக்கு என்ன அத்தாட்சி வச்சிருக்கீங்க என்று கேட்கவே, ஆவேசமான கார்மேகம் அப்புறம் நீ என்னய கேட்குற கவுன்சிலரான்னு, நீ இங்க நேர்ல வா, உன் வாய உடைக்கிறேன் என்று ஆக்ரோஷமாக, சரி நாளைக்கு வருகிறேன் என்று மணிகண்டன் சொல்வதுடன் உரையாடல் முடிகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அராஜகங்களும், அட்டகாசங்களும் அதிகரித்துவிடும் என்பது பொதுமக்களிடையே பொதுவாக நிலவி வரும் கருத்தாகும். அதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அமைச்சர்கள் முதல் கடைமட்ட நிர்வாகிகள் வரை இதற்கு விதிவிலக்கல்ல. இதனால் நொந்து நூடுல்ஸான முதல்வரும், தி.மு.க. கட்சித் தலைவருமான ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். தினமும் தூங்கி எழுந்திருக்கும்போது ஏதாவது பிரச்னையோடவே எழுகிறேன். நான் தூங்கி பல நாட்களாகி விட்டது. எனது உடம்பைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். ஆகவே, கட்சி நிர்வாகிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுக்குழுக் கூட்டத்தில் குமுறித் தள்ளினார். ஆனாலும், நிர்வாகிகள் பொறுப்புடன் நடந்துகொள்வதாகத் தெரியவில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏதாவது பிரச்னையை இழுத்துவிட்டு ஸ்டாலின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது மதுரை மாநகராட்சி கவுன்சிலர் செல்வியின் கணவர் கார்மேகம், மீண்டும் ஸ்டாலினின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறார்.


Share it if you like it