சாதுக்களின் சாபமே உத்தவ் தாக்கரே வீழ்ச்சி!

சாதுக்களின் சாபமே உத்தவ் தாக்கரே வீழ்ச்சி!

Share it if you like it

பால்கர் சாதுக்களின் சாபம்தான் உத்தவ் தாக்கரேவின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது என்கிறார்கள் ஆன்மிக சான்றோர்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி. இதில், பா.ஜ.க. 106 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் தகுதியை பெற்றன. அதன்படி, பா.ஜ.க.வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். ஆனால், முதல்வர் பதவி தங்களுக்குத்தான் வேண்டும் என்று அடம் பிடித்தது சிவசேனா. இதற்கு பா.ஜ.க. உடன்படாததால், அக்கட்சிக்கு அளித்தவந்த ஆதரவை விலக்கிக் கொண்டது சிவசேனா. இதனால், பட்னவிஸின் ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது சிவசேனா. அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். மேலும், தனது மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி வழங்கி கவுரவித்தார். இது சிவசேனா கட்சியினருக்கு பிடிக்கவில்லை. மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதுதான் சிவசேனா கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் விருப்பம். ஆனால் உத்தவ் தாக்கரேவோ, எதிரிகளுடன் கூட்டணி வைத்ததோடு, தங்களது சித்தாந்தத்துக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இது ஒருபுறம் இருக்க, உத்தவ் தாக்கரேவின் ஆட்சியில் கம்யூனிஸ்ட் மற்றும் கிறிஸ்தவ மத மாற்ற மிஷனரிகள் பால்கர் சாதுக்கள் இருவரை அடித்தே கொலை செய்தனர். அதுவும் போலீஸ் முன்னிலையிலேயே இச்சம்பவம் நடந்தது. ஆனால், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உத்தவ் தாக்கரே அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இச்சம்பவம் ஹிந்துத்துவா அமைப்பினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு, சிவசேனா தொண்டர்கள் மத்தியிலும் கொதிப்பை ஏற்படுத்தியது. மேலும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டு, தங்களது சித்தாந்தத்தையே உதாசீனப்படுத்தினார் உத்தவ் தாக்கரே. மேலும், ஹனுமன் சாலிசா ஒலிபரப்பியதற்காக ஹிந்து அமைப்பைச் சேர்ந்த சுயேட்சை எம்.பி. நவ்நீத் ராணா, சுயேட்சை எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தார் உத்தவ் தாக்கரே.

இதுபோன்ற செயல்கள் சிவசேனா தொண்டர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கட்சிக்குள் புகைச்சல் இருந்து வந்த நிலையில்தான், நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி தூக்கிய சிவசேனா அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வின் பக்கம் சாய்ந்தனர். ஆரம்பத்தில் 28 பேர் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 40 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. பக்கம் வந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், உத்தவ் தாக்கரேவின் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. காரணம், தற்போது அவரிடம் இருப்பது வெறும் 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே. ஆகவே, ஆட்சி கவிழப்போகிறது என்று முடிவு செய்த உத்தவ் தாக்கரே, முதல்வருக்கான அரசு பங்களாவே நேற்று இரவு காலி செய்தார்.

இந்த நிலையில்தான், உத்தவ் தாக்கரேவின் ஆட்சி கவிழ்வதற்கு முக்கியக் காரணம், அவரது ஆட்சியில் நடந்த பால்கர் சாதுக்கள் கொலைதான் என்று ஆன்மிக சான்றோர்கள் கூறியிருக்கிறார்கள். சாதுக்களை பொறுத்தவரை மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். ஹிந்து தர்மத்தை காப்பதற்காகவே இவ்வுலகில் அவதரித்தவர்கள். அவர்களை சிலர் அடித்துக் கொன்றிருக்கிறார்கள். இதை உத்தவ் தாக்கரே கண்டுகொள்ளவில்லை. எனவே, சாதுக்கள் அனைவரும் உத்தவ் தாக்கரேவுக்கு சாபம் விட்டு விட்டார்கள். இதன் விளைவுதான் தற்போது உத்தவின் ஆட்சி கவிழக் காரணமாகி இருக்கிறது என்கிறார்கள்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்னு சும்மாவா சொன்னாங்க!


Share it if you like it