குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிகப்பெரிய எதிரிகள்: பிரதமர் மோடி ‘அட்டாக்’!

குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிகப்பெரிய எதிரிகள்: பிரதமர் மோடி ‘அட்டாக்’!

Share it if you like it

குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிகப்பெரிய எதிரிகள் என்று பிரதமர் மோடி அட்டாக் செய்திருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பாரத பிரதமர் மோடி, நாக்பூரில் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, டிக்கெட் எடுத்து அந்த ரயிலில் பயணம் செய்த மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், மும்பையிலிருந்து நாக்பூர் வரை 701 கி.மீ. தூரத்துக்கு 55,000 கோடி ரூபாய் செலவில் 10 மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடந்து வரும் சாலை பணிகளை பார்வையிட்டார். பின்னர், நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார்.

அதாவது, 1,575 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கி, சமீபத்தில் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக இருந்தது. இந்த மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைப்பதாக இருந்தது. அதன்படி, இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்த அமுத காலத்தில் மாநிலங்களின் வளர்ச்சியானது, நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆற்றலை வலிமைப்படுத்தும். குறுக்குவழி அரசியலுக்கு எதிராக நான் எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன். குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து முன்னேறத் துடிக்கும் அரசியல்வாதிகள் நமது நாட்டின் மிக பெரும் எதிரிகள். பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விடலாம் என்ற நோக்கத்துடன் உள்ளவர்களால் அரசமைக்க முடியாது. வளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களை நான் வலியுறுத்தி கூறிக் கொள்கிறேன்” என்றார்.


Share it if you like it