பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புல்வாமாவில் நிகழ்த்திய தாக்குதலுக்கு இந்தியா எப்படி? பதிலடி கொடுத்து என்பதை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
புல்வாமா தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்த கொடூர தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதாவது, ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிக் கொண்டு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை இந்திய ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் மோதச் செய்து மிகப்பெரிய தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி இருந்தான். இச்சம்பவம், இந்திய மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.
இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா எவ்வாறு? சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது என்பது குறித்து மாஜி ராணுவ உயர் அதிகாரி மதன்குமார் அண்மையில் மீடியானுக்கு அளித்த பேட்டியில் மிக விளக்கமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.