இந்தியாவில் சைபர் ஜிஹாத் நடைபெற்று இருப்பதாக ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி மேஜர் மதன் குமார் பகீர் தகவலை தெரிவித்து இருக்கிறார்.
பா.ஜ.க.வின் முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நுபுர் ஷர்மா. இவர், சமீபத்தில் கலந்து கொண்ட ஊடக விவாதத்தில், ஹிந்துக்களின் வழிபாட்டுக்குறிய தெய்வமான சிவலிங்கத்தை இஸ்லாமியர் ஒருவர் இழிவுப்படுத்தி பேசி இருந்தார். இதற்கு, எதிர்வினை ஆற்றும் விதமாக குரானில் இருந்து சில கருத்துக்களை நுபுர் சர்மா மேற்கோள் காட்டி பேசி இருக்கிறார். இதற்கு, பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.
நுபுர் ஷர்மாவிற்கு, தொடர் கொலை மிரட்டல்கள் வந்த காரணத்தினால் மத்திய அரசு அவருக்கு உரிய பாதுகாப்பினை தற்பொழுது வழங்கி இருக்கிறது. இதுதவிர, நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் நபர்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர்ந்து கொலை செய்து வரும் சம்பவங்களும் இந்தியாவில் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் தான், இந்தியாவுக்கு எதிரான சைபர் ஜிஹாத் தாக்குதலை
பாகிஸ்தான், துருக்கி, மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் தற்பொழுது நடத்தி இருக்கின்றனர். அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த தானே காவல்துறை, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காவல்துறை மற்றும் அசாமில் உள்ள ஒரு செய்தி சேனல் என கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் மீது ஹேக்கர்கள் தாக்குதல்களை நடத்தி இருக்கின்றனர்.
இது குறித்தான செய்தினை ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ உயர் அதிகாரி மேஜர் மதன் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அது குறித்தான லிங்க் இதோ.