பா.ஜ.க.வுக்கு எதிராக ஜிஹாத்: முதல்வர் அழைப்பு!

பா.ஜ.க.வுக்கு எதிராக ஜிஹாத்: முதல்வர் அழைப்பு!

Share it if you like it

பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள் என மேற்கு வங்க முதல்வர் அழைப்பு விடுத்து இருக்கும் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க முதல்வராக இருப்பவர் மம்தா பேனர்ஜி. இவரது, கொடூங்கோல் ஆட்சியின் காரணமாக அம்மாநில மக்கள் இன்று வரை கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதுதவிர, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கு(தொ)ண்டர்களுக்கு பயந்து பல அப்பாவி மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறும் சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் இருந்து வருகிறது.

அந்தவகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து பா.ஜ.க.வினர் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் நிகழ்த்திய வன்முறையில் பா.ஜ.க. தொண்டர்களின் வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதவிர, 100-க்கும் மேற்பட்ட அப்பாவி பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருந்தனர். கொடூங்கோல் ஆட்சி நடத்தி வரும் மம்தாவிற்கு எதிராக தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2093 பெண் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டு இருந்தனர் என்பதை நாடே நன்கு அறியும்.

Image

இதையடுத்து, மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறையை ஆய்வு மேற்கொள்ள சென்ற மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முரளிதரன் மீது ஆளும் கட்சியை சேர்ந்த குண்டர்கள் மிகப்பெரிய தாக்குதல்களை நிகழ்த்தி இருந்தனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் அந்நாட்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழகம் போன்று மேற்கு வங்கத்திலும் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சந்தி சிரித்து வருகிறது என்பதற்கு மத்திய அமைச்சர் மீது நிகழ்ந்த தாக்குதலே சிறந்த உதாரணம்.

இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க.வின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மாளவியா மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பேசிய காணொளி ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

மேற்கு வங்காளத்தின் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி, 2022- ஆம் ஆண்டு ஜூலை 21 -ஆம் தேதியை பா,ஜ,க,வுக்கு எதிரான “ஜிஹாத்” நாளாக அறிவித்து இருப்பதாக கூறியிருக்கிறார்.

ஒரு மாநிலத்தின் முதல்வரே மேற்கு வங்க மக்களிடம் ஜிஹாத்திற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்து இருக்கும் சம்பவம்தான் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

/https://twitter.com/OpIndia_com/status/1506797955075883011


Share it if you like it