திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கு(தொ)ண்டர்கள் நிகழ்த்திய வெறி செயலில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி, அளித்த பதில் பொதுமக்கள் மத்தியில் கடும் கோவத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் பர்ஷால் ஊராட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாது ஷேக். இவர், கடந்த 21-ம் தேதி இரவு அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு, பா.ஜ.க.வினர்தான் என்று தவறாக நினைத்து கொண்டு அவரின் ஆதரவாளர்கள் அன்றையதினம் இரவோடு இரவாக பா.ஜ.க.வினர் வசிக்கும் ராம்புர்கர் பகுதியிலுள்ள 12 வீடுகளுக்கு தீவைத்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வாகனத்தையும், உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், மொத்த வீடுகளும் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் என நாடு முழுவதிலுமிருந்து சமூக ஆர்வலர்கள், பலர் குரல் மம்தா அரசிற்கு எதிராக கொடுத்தனர். இதனை தொடர்ந்து, மேற்குவங்க முதல்வர் வன்முறை சம்பவம் குறித்து பொறுப்பற்ற, முறையில் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா பேனர்ஜி கூறியதாவது ; நியாயமான முறையில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்போம். பிர்பும் கொலைகளை நியாயப்படுத்தவில்லை என்றாலும், உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மற்ற மாநிலங்களில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி தனது மாநிலத்தில் நிகழ்ந்த தவறை மறைக்க முயல்வது வெட்ககேடான செயல் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் போன்று பிரதமர் கனவில் இருக்கும் இவர் எல்லாம் நம்மை ஆள நினைத்தால் நாடு இன்னொரு எமர்ஜென்சியை சந்திக்க நேரிடும் என்பது அனைவரின் கருத்து.
/https://twitter.com/OpIndia_com/status/1506797955075883011