மக்களவை தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் மக்களிடையே உரையாடும்போது பிரதமர் மோடியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார். மம்தாவின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மம்தாவின் பேச்சுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வார்த்தையான ‘சாலா’ உட்பட மம்தா பானர்ஜியின் தவறான வார்த்தைப் பிரயோகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அத்தகைய மொழிக்கு நமது அரசியல் விவாதத்தில் இடமில்லை. நமது ஜனநாயக செயல்பாட்டின் கண்ணியத்தை காக்க தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
https://x.com/VanathiBJP/status/1775822625270288434?s=20